www.garudavega.com

பிரபல ஒளிப்பதிவாளரின் தந்தை., 99 வயதில் காலமானார்.! - திரைத்துறையினர் இரங்கல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல ஒளிப்பதிவாளரின் தந்தை தனது 99 வயதில் காலமாகியிருக்கும் தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. 

ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் தந்தை 99 வயதில் காலமானார் | cinematographer and director velraj's father passed away at 99 age

தமிழ் சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் வேல்ராஜ். இவர் தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் உருவான ஆடுகளம், வடச்சென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டாதாரி, தங்கமகன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 

இந்நிலையில் வேல்ராஜ் அவர்களின் தந்தை எஸ்.ராஜாமணி அவர்கள் இயற்கை எய்தினார் என தெரிய வந்துள்ளது. மதுரை கூத்தியார்குண்டை சேர்ந்தவரான இவர், வயது (99) மூப்பு காரணமாக இன்று மதியம் 1.45 மணியளவில் மரணமடைந்தார். இதையடுத்து நாளை அவரின் உடல் தகனம் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வேல்ராஜின் தந்தை மரணத்திற்கு, திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் தந்தை 99 வயதில் காலமானார் | cinematographer and director velraj's father passed away at 99 age

People looking for online information on Dhanush, Passed away, R Velraj, Thangamagan, Velraj Father will find this news story useful.