93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கியது. பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்வு சமூக இடைவெளியுடன் நடக்கிறது.
இதில் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை நோமேட்லாண்ட் (nomadland) படத்துக்காக சீன பெண் இயக்குனர் க்ளோயி சாவ் (Chloé Zhao) பெற்றார்.
#Oscars Moment: Chloé Zhao accepts the Oscar for Best Directing for @nomadlandfilm. pic.twitter.com/1W1zPSxEWS
— The Academy (@TheAcademy) April 26, 2021
சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதினை ஜூடாஸ் அண்ட் தி பிளாக் மெசியா (Judas and the Black Messiah) படத்துக்காக டேனியல் கல்லூயா (Daniel Kaluuya) பெற்றார்.
congrats to Brad Pitt who finally met Yuh-Jung Youn pic.twitter.com/d9TTa4kuoQ
— Twitter Movies is watching the Oscars (@TwitterMovies) April 26, 2021
இதேபோல் சிறந்த துணை நடிகைக்கான விருதினை மினரி (Minari) படத்துக்காக யூ ஜங் யோன் (Yuh-Jung Youn) பெற்றார்.
#Oscars Moment: @emeraldfennell wins Best Original Screenplay for Promising Young Woman (@PromisingFilm). pic.twitter.com/bccGqPdIeQ
— The Academy (@TheAcademy) April 26, 2021
சிறந்த திரைக்கதைக்கான விருதை பிராமிசிங் யங் வுமன் (Promising Young Woman) படத்துக்காக எமரால்டு பென்னல் (Emerald Fennell) பெற்றார்.
#Oscars Moment: See the winners for Best Adapted Screenplay: Florian Zeller and Christopher Hampton for The Father! pic.twitter.com/QmWAKZ9Qhd
— The Academy (@TheAcademy) April 26, 2021
சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை தி பாதர் (The Father) படத்துக்காக கிறிஸ்டோபர் ஹாம்ப்டன் மற்றும் புளோரியன் ஜெல்லர் பெற்றனர்.
#Oscars Moment: Another Round wins for Best International Feature Film. pic.twitter.com/y657YZEGZR
— The Academy (@TheAcademy) April 26, 2021
சிறந்த சர்வதேச முழுநீளப்படத்துக்கான ஆஸ்கர் விருதினை அனதர் ரவுண்ட் (Another Round) திரைப்படமும், சிறந்த முழுநீள அனிமேஷன் படத்துக்கான விருதினை சோல் (Soul) திரைப்படமும், சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான விருதினை இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ், ஐ லவ் யூ ("If Anything Happens, I Love You") படமும் வென்றுள்ளது.
#Oscars Moment: @PippaEhrlich, James Reed and Craig Foster accept the Oscar for Best Documentary Feature: My Octopus Teacher pic.twitter.com/a1INlTEYpX
— The Academy (@TheAcademy) April 26, 2021
தவிர சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுக்காக Tenet படத்துக்கும், முழுநீள ஆவணப்படத்துக்காக மை ஆக்டோபஸ் டீச்சர் (My Octopus Teacher) படத்துக்கும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.