இந்தியா முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் அதிக அளவு பயன்படுத்தும் அழகு சாதனப் பொருள் ஃபேர் அண்ட் லவ்லி. இது ஒரு இந்துஸ்தான் லீவர் லவ்லி. தயாரிப்பு. 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பரிட்சயமான பெயரும் கூட.
இந்நிலையில் அந்நிறுவனம் தங்கள் பொருட்களில் இருக்கும் பேர், வையிட், லைட்னிங் போன்ற வார்த்தைகளை நீக்கப் போவதாக அறிவித்துள்ளனர். அனைத்து தர சரும நிறங்களையும் போற்றும் விதத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை நடிகை நந்திதாதாஸ் மிகவும் வரவேற்றுள்ளார்.
அவர் கூறும்போது பெரும்பான்மையான கருமை நிற மக்கள் வாழும் ஒரு நாட்டில் வெள்ளையாக இருப்பது தான் அழகு என்பது போன்ற மெசேஜை பல நிறுவனங்கள் பரப்புகின்றன. இந்நிலையில் ஒரு முன்னனி நிறுவனம் இந்தக் கருத்தை முன்வைப்பது. இதனை மேலும் விவாதப் பொருள் ஆக்கும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
— Nandita Das (@nanditadas) June 26, 2020