1983 ஆம் ஆண்டு இந்திய மக்களால் மறக்கமுடியாத சம்பவம் ஒன்று உள்ளது. அதிலும் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த வருடத்தை கண்டிப்பாக மறக்க மாட்டார்கள்.
பலரும் நேரில் கண்டிராத அந்த பொக்கிஷமான சம்பவத்தை படத்தின் மூலம் அனைவரின் கண்முன் பார்க்க போகும் படம் தான் 83. 1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது. அதை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. கபில்தேவ் தலைமையில் இந்த வெற்றி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் ட்ரைலர் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ளார்.அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். ஸ்ரீகாந்தின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படம் நாளை தியேட்டர்களில் ரிலீஸாகிறது. படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும், 3டியிலும் வெளியாகிறது. பல உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 1983 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை இறுதி ஆட்டத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது. இதனை மையமாக வைத்தும் கபில்தேவின் வாழ்க்கை சம்பவங்களை கொண்டும் 83 படம் எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ’83’ படத்தின் டிரெய்லர் வீடியோ தொகுப்பை துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மும்பையில் இப்படம் திரையிடப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவுகின்றது.