BREAKING: 'தியேட்டரில் தான் வெளியிடுவோம்’ - OTTக்கு நோ சொல்லி, பெரிய தொகையை மறுத்த படக்குழு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவுக்கும் கிரிக்கெட்டுக்கும் உள்ள பந்தத்திற்கு மகுடம் சூடிய ஒரு சந்தர்ப்பம் 1983ல் நிகழ்ந்தது. உலகக் கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியா வென்று உலகக் கோப்பையை முதல்முதலாக கைப்பற்றியது.

இந்த வரலாற்று நிகழ்வை மையப்படுத்தி உருவான திரைப்படம் 83. ரன்வீர்சிங், ஜீவா, தீபிகா படுகோன், ஹர்தே சந்து ஆகிய நட்சத்திரப் பட்டாளத்தோடு உருவான இந்த திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் வெளியாக இருந்தது.

திடீரென நிலவிய லாக்டவுன் சூழலால் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகி இருக்க வேண்டிய இந்த திரைப்படம் தள்ளி போனது. ஆனால், OTT தளங்கள் தொடர்ந்து புதிய படங்களை வெளியிடுவதில் தற்போது கவனம் காட்டி வருகிறது. சமீபத்தில் கிடைத்த தகவலின்படி 83 படத்துக்கு OTT தளம் ஒன்று பெரிய தொகையை முன்வைத்ததாக கூறப்படுகிறது.

ஆனால், படத்தின் இயக்குநர் கபீர் கான், “83 பெரிய திரைக்காக உருவாக்கப்பட்ட திரைப்படம். சூழ்நிலை சீர்படும் வரை காத்திருந்து திரையரங்கில் வெளியிட ஆவலுடன் இருக்கிறோம்” எனக்கூறி மறுத்துள்ளார். இந்த படத்தில் கபில் தேவாக ரன்வீர் சிங்கும், ஸ்ரீகாந்தாக ஜீவாவும் நடிக்கின்றனர்.

Entertainment sub editor

83 movie director kabir khan turns down OTT telecasting of his film | 83 திரைப்படத்தை இணைய ஒளிபரப்பு ஊடகத்தில் வெளியிட 83 பட இயக்குநர் மறு

People looking for online information on 83, Deepika Padukone, Jiiva, Kabir Khan, Ranveer Singh will find this news story useful.