இந்தியை மூலமாக கொண்டு ரன்வீர் சிங், ஜீவா, தீபிகா படுகோனே நடிப்பில் 83 படம் தாயாராகி வருகிறது.
இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் வெளியாகிறது. இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 1983 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை இறுதி ஆட்டத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது. இதனை மையமாக வைத்தும் கபில்தேவின் வாழ்க்கை சம்பவங்களை கொண்டும் 83 படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் ரோலில் தமிழ் நடிகர் ஜீவாவும், கபில் தேவாக நடிகர் ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். இதில் கபில் தேவ் மனைவி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரன்வீர் சிங் தீபிகா படுகோனே இந்தப்படத்தை தயாரிக்கின்றனர். இந்தப்படத்தின் டீசர் ஏற்கனவே (26.11.2021) வெளியாகி உள்ளது.இந்த படத்தின் டிரெய்லர் இன்று நவம்பர் 30ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலககோப்பையை இங்கிலாந்து மண்ணில் வென்ற நிகழ்வை மையமாக கொண்டு டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் டிசம்பர் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
