www.garudavega.com

"25 வருஷம் நாய் மாரி"... "ஒரு படத்துக்கும் PAYMENT SETTLE பண்ல" - கேமரா மேன் PAINFUL STORY!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஜாதி ராஜா, மெல்ல திறந்தது கதவு, நான் பாடும் பாடல், அம்மன் கோவில் கிழக்காலே, வைதேகி காத்திருந்தாள் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ராஜராஜன் என்கிற பாண்டியன். தன் ஒளிப்பதிவுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கையால் விருதும் பெற்றவர்.

80s 90s camera man rajarajan painful story exclusive

Also Read | "247 KM SPEED-ஆ..?.. என் பசங்கள தப்பா வழிநடத்துறனா? கஷ்டமா இருக்கு" - TTF வாசன் வீடியோ..!

தமிழின் முன்னணி நடிகர்களின் ஹிட் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த இவரை பற்றி அதிக கூகுள் தேடல்கள் ஏதுமில்லை. ஆனால் திரைப்படங்களின் விபரங்களில் இவருடைய பெயர் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து இவரை நேர்காணல் செய்யும்போது பல சுவாரஸ்ய மற்றும் அதிர்ச்சி மிகுந்த பின்னணி தகவல்கள் கிடைக்கின்றன.

இதுபற்றி பிரத்தியேகமான நேர்காணலில் அவர் கூறியதாவது:-

“நான் வாகினி ஸ்டூடியாவில் கேமரா உதவியாளராக சென்று இருந்தேன். மிகப்பெரிய கேமராமேன்  - ஜாம்பவான் பாலு மகேந்திரா படங்களில் உதவியாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. பந்தா, பகட்டு ஏதும் இல்லாத நபர் அவர். தொடர்ந்து தனியாக ஒளிப்பதிவாளராக படம் பண்ணுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. எனினும் பண விஷயத்தில் பெரிதாக டிமாண்ட் செய்ய மாட்டேன்.

எனக்கு பணம் பெற தெரியாது என்று எங்கள் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் அடிக்கடி சொல்வார். அது அப்படி அல்ல. நான் உழைக்கும் உழைப்பு பற்றி தயாரிப்பாளர்களுக்கு நன்றாகவே தெரியும். பிறகு நான் எதற்கு சென்று சம்பளத்தை கேட்டு பெற வேண்டும், நான் என்ன பிச்சையா எடுக்கிறேன் .? செய்த உழைப்புக்கான ஊதியம் தரவேண்டும் என்பது அவர்களுக்கு தான் தெரியவேண்டும்.

80s 90s camera man rajarajan painful story exclusive

இப்போது வரை எனக்கு நான் பணிபுரிந்த எந்த படத்திலும் செட்டில்மெண்ட் கிடைத்ததில்லை. அட்வான்ஸ் மட்டுமே கொடுத்தார்கள். படம் நன்றாக ஓடினாலும் கூட அதற்கான முறையான முழு ஊதியம் கிடைத்தபாடில்லை. அம்மன் கோயில் கிழக்காலே என்கிற ஒரு படத்துக்கு எனக்கு 15,000 பேசினார்கள். படம் நன்றாக இருந்ததாக அனைவரும் கூறினார்கள். ஆனால் எனக்கு இன்னும் செட்டில்மெண்ட் வரவில்லை. சினிமாவின் நிலைமை இதுதான். அனைவருக்கும் கொடுத்து விடுவார்கள்.  ஒரு ஸ்டில் போட்டோகிராஃபருக்கு ஒரு விசேஷத்தில் கடைசிவரை பேமெண்ட் கொடுக்க மாட்டார்கள். பாக்கி வைத்து திருப்பி அனுப்பி விடுவார்கள். அதே நிலைமைதான் சினிமா கேமராமேனுக்கும்.

80s 90s camera man rajarajan painful story exclusive

25 வருடம் சினிமாவில் கண்மூடித்தனமாக இரவு பகலாக உழைத்தேன். சில சமயம் அடிபட்டிருக்கிறது. கேமரா முகத்தில் விழுந்து பல் உடைந்திருக்கிறது. வீட்டுக்கு வருவதே மிக குறைவு. என் பிள்ளைகள் என்னை அந்நியராகவே பார்ப்பார்கள். ராட்சசன் போல் பார்ப்பார்கள். ஏனென்றால் நான் வீட்டில் இருப்பதில்லை. பெரும்பாலான நேரம் சினிமாவில் பரபரப்பாக பொழுதை கழித்துவிட்டு வீட்டுக்கு வந்தாலும் நாய் மாதிரி வள் வள் என்று விழுவேன். அந்த காலத்தில் நாங்கள் இதுபோன்ற கூகுளில் வரும் பெயர்களுக்கெல்லாம் விரும்பவில்லை. மன நிறைவாக பணி செய்வோம்.

80s 90s camera man rajarajan painful story exclusive

நான் பணிபுரிந்த பல முன்னணி நடிகர்களும் தங்கமானவர்கள். விஜயகாந்த் சார் அப்படித்தான், எனக்கு மிகவும் நெருக்கம். நல்ல மனிதர். பிரபு சார் மிகவும் அன்பானவர். ஒரு முறை பாண்டித்துரை என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பில் தலைப்பா கட்டி பிரியாணி நிறுவன ஊழியர்கள் வந்து சமைத்து எங்களுக்கு பிரியாணி கொடுத்தார்கள். அந்த அளவுக்கு அன்பு மிக்கவர் பிரபு சார். அனைவரையும் மச்சான் என்று அழைக்கக்கூடிய பாங்கு அவருடையது. அப்படியான மனிதர்களுடன் பணிபுரிந்த நினைவுகளால் தான் நாங்கள் இன்றும் ஆரோக்கியமாக இருக்கிறோம்.

80s 90s camera man rajarajan painful story exclusive

இப்போது அந்த காலத்தை நாங்கள் மிஸ் பண்ணுகிறோம். அதுதான் பொற்காலம். இப்போது இன்னும் நேர்மை குறைந்து இருப்பதாகவே தோன்றுகிறது. இப்போது எனக்கு எதுவும் வேண்டாம். திரும்பவும் பணிபுரியும் எண்ணம் இல்லை. நான் என் குடும்பத்துடன் மதுரை அலங்காநல்லூரில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.. நன்றி!”.

Also Read | அதிர்ச்சி.. 4 தேசிய விருது வென்ற இயக்குநர் மரணம்.! புகழ்பெற்ற அவரது 8 படங்கள்.!

"25 வருஷம் நாய் மாரி"... "ஒரு படத்துக்கும் PAYMENT SETTLE பண்ல" - கேமரா மேன் PAINFUL STORY! வீடியோ

மற்ற செய்திகள்

80s 90s camera man rajarajan painful story exclusive

People looking for online information on Camera man Raja Rajan Painful lifestory, Old Cameraman painful life, Old movies will find this news story useful.