இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து 800 என்ற படம் சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
இந்த திரைப்படத்தில் முரளிதரனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பின்னர் இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகினார்.
இந்நிலையில் முரளிதரன் கதாபாத்திரத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து நடிகர் தேவ் பட்டேல் நடிக்க உள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வெளியாகியுள்ளது. இவர் 'ஸ்லம்டாக் மில்லினியர்', 'ஹோட்டல் மும்பை', 'The Wedding Guest' படங்களில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் இலங்கையில் நடந்து வருவதாகவும், கிட்டத்தட்ட அனைத்து படப்பிடிப்பும் முடிந்து படம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது என்றும் நம்பத்தகுந்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஸ்ரீபதி இயக்க, R D ராஜ சேகர் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இலங்கையின் மலையகத் தமிழரான முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் ஆவார்.