www.garudavega.com

#SHAMEONVIJAYSETHUPATHI சர்ச்சை... 800 படக்குழுவினர் வெளியிட்ட அவசர அறிக்கை..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை மையமாக வைத்து 800 என்ற படத்தை உருவாக்க உள்ளனர். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்த நிலையில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டிவிட்டரில் 'ஷேம் ஆன் விஜய் சேதுபதி' என்ற ஹேஷ்டேக்  டிரெண்டாகி வருகிறது

800 film crew clarifies for shame on vijaysethupathi controversy 800 படக்குழுவினர் வெளியிட்ட அவசர அறிக்கை

இந்நிலையில் இது குறித்து படக்குழுவினர் தற்போது முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் "முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் 800 திரைப்படம் பல்வேறு வகையில் அரசியல் ஆக்கப்பட்டு வருவதை அறிகிறோம். 800 திரைப்படம் முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிர, இதில் எந்த வித அரசியலும் கிடையாது. தமிழகத்தில் இருந்து தேயிலைத் தோட்டக் கூலியாளர்களாக இலங்கைக்கு குடிபெயர்ந்த ஒரு சமூகத்தில் இருந்து வந்த முரளிதரன் எப்படி பல தடைகளைத் தாண்டி உலக அளவில் சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார் என்பது தான் திரைப்படத்தின் கதையம்சம்.

திரைப்படம் இளைய சமுதாயத்துக்கும் வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும் தங்கள் வாழ்க்கை பயணத்தில் எவ்வளவு தடைகள் வந்தாலும் தடைகளை கடந்து சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் படமாக இருக்கும். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளராக ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும். இத்திரைப்படத்தில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் விதத்திலான காட்சியமைப்புகள் கிடையாது" என்று தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

800 film crew clarifies for shame on vijaysethupathi controversy 800 படக்குழுவினர் வெளியிட்ட அவசர அறிக்கை

People looking for online information on 800, Muttiah Muralitharan, Vijay Sethupathi will find this news story useful.