BREAKING: விஜய்யின் தளபதி 65 படத்தின் டைரக்டர் யார் தெரியுமா ? ஷூட்டிங் பற்றிய விபரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் 'மாஸ்டர்' பட இசை வெளியீட்டு விழா நேற்று ( மார்ச் 16 ) மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. தளபதியை வெட்கப்படவைத்த விஜய் சேதுபதியின் பேச்சு, தல அஜித் பற்றி தனது பேச்சில் குறிப்பிட்ட விஜய், விஜய் சேதுபதிக்கு விஜய் கொடுத்த முத்தம் உள்ளிட்டவை விழாவின் ஹைலைட்டாக அமைந்தது.

நடிகர் விஜய்யின் தளபதி 65 படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாம் | AR Murugadoss m

மேலும் படக்குழுவினருடன் விஜய் எடுத்த செல்ஃபி ஃபோட்டோ வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவினால் மகிழ்ச்சியில் இருக்கும் ரசிகர்களுக்கு அவர்களது மகிழ்ச்சியை இரட்டிப்பார்க்கும் செய்தி எங்களுக்கு கிடைத்துள்ளது.

நடிகர் விஜய்யின் 'தளபதி 65' பட இயக்குநர் குறித்து கடந்த ஒரு மாதமாக பல்வேறு தகவல்கள் நிலையில் அந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கிறாராம். சன் பிக்சர்ஸ் அந்த படத்தை தயாரிக்கவுள்ள 'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் துவங்கப்படவிருக்கிறதாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் விஜய்யின் தளபதி 65 படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாம் | AR Murugadoss m

People looking for online information on AR Murugadoss, Sun pictures, Vijay will find this news story useful.