பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 வாக்கில் வெளியாகி இருந்தது அவதார் திரைப்படம்.
Also Read | "விக்ரம் வேதா" படத்தின் இந்தி ரீமேக்.. ரிலீஸ் தேதியுடன் வெளியான மாஸ் FIRST LOOK போஸ்டர்கள்!
இந்த படம்தான் தற்போது 4K ரெஸொலியூஷனில் 3D காட்சி அனுபவத்தில் HDR தரத்தில் ரீமாஸ்டர் செய்யப்பட்டுள்ளது. இந்த போஸ்டரையும் டிரெய்லரையும் பகிர்ந்துள்ளார் அப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். இந்த புதிய பிரிண்ட்டில் தான், செப்டம்பர் 23-ம் தேதி அவதார் படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து அவதார் படத்தின் 2-ஆம் பாகம் வெளியாகவுள்ளது. ஆனால் இரண்டாம் பாகம் வெளியாகும் முன், அதற்கு முன்னோட்டமாக இந்த படத்தின் முதல் பாகத்தை மக்களுக்கு நினைவூட்டி, ஒரு தொடர்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்கும் வகையில், மிக குறுகிய காலத்திற்கு மட்டுமே திரையரங்குகளில் திரையிடப்படும் யோசனையில் அவதார் படக்குழு இப்படத்தின் முதல் பாகத்தை வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளது.
உலக அளவில் பலத்த வரவேற்பை பெற்ற இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸில் சுமார் 2.85 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்த படம் வசூலித்தது. சிறந்த கலை வடிவமைப்பு, ஒளிப்பதிவு மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் ஆகிய மூன்று பிரிவுகளில் இந்த படம் ஆஸ்கர் விருது வென்றாலும், இந்த திரைப்படத்தின் ஏனைய பிரிவுகளின் தொழில்நுப்டமும் கதையும் திரைக்கதையும் அது காட்சிப்படுத்தப்பட்ட விதமும் உலக பார்வையாளர்களிடையே தனக்கென ஓர் தன்னிரிகரில்லாத இடத்தை பிடித்துள்ளது.
அதன் அடுத்தடுத்த பாகங்கள் 2 ஆண்டுகள் இடைவெளியில் 2028 வரையில் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. மனிதர்களுக்கும், பண்டோரா எனும் வேற்று ஃபேண்டசி உலகத்தை சேர்ந்த நாவி மக்களுக்கும் இடையிலான பிரம்மிக்கக் கூடிய நிகழ்வுகள் இந்த படத்தின் மையக்கதை. இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | விரைவில் வெள்ளித்திரையில் ராஜா ராணி 2 சீரியல் ஹீரோ..! வைரலாகும் புதிய ஃபோட்டோஸ்.!