இது டிடி சொல்லும் குட்டி ஸ்டோரி.. பெண்கள் தினத்தில் வைரலாகும் வீடியோ!
நடிகையும் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான திவ்ய தர்ஷினி என்கிற DD பெண்கள் தினத்தன்று தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வைரலான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் டிடி சில சார்ட்டுகளை கையில் வைத்துள்ளார். அவற்றில் “36+ல் விவாகரத்து", "36 +ல் குழந்தையின்மை", "36+ல் மூட்டு வலி", "ஆனாலும் 36+ல் சந்தோஷம்", "ஏனென்றால் எல்லோருடைய டைம்லைனும் வெவ்வேறானவை", "ஆக, உங்கள் சந்தோஷத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமானால் உங்களுடைய டைம்லைனை நீங்கள் என்ஜாய் பண்ணுங்க", "Happy Womens Day" என்று டிடி குறிப்பிட்டுள்ளார்.
இதை பார்த்த பலரும் 36 வயதாகினால் பெண்களுக்கு வாழ்க்கையின் பெரும்பகுதி முடிந்துவிட்டது என அர்த்தம் இல்லை என்பதை வெளிப்படுத்தியதற்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். பலரும் டிடிக்கு வாழ்த்து சொல்லி வருவதுடன், சிலர் இத்தகைய மோடிவேஷன் சிந்தனைக்கு நன்றியும் தெரிவித்து கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.