தல தோனி சென்னை தியேட்டரில் படம் பார்க்கும் வீடியோ வைரல் - என்ன படம் தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த வருடத்துக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் துவங்கப்படவிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடும் தோனி கடந்த வாரம் சென்னை வந்தார். இதனையடுத்து ஐபிஎல் தொடர்பான பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

தல தோனி ரெய்னாவுடன் இணைந்து பாகி 3 படம் பார்த்தார் | Thala Dhoni and Raina watched Baaghi 3 at Chennai Sathyam Cinemas

இந்நிலையில் நம்ம தல தோனி கடுமையான பயிற்சிகளுக்கு இடையே ரெய்னாவுடன் இணைந்து சென்னை சத்யம் திரையரங்கில் 'பாகி 3' (Baaghi 3) திரைப்படத்தை பார்த்து ரசித்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டைகர் ஷெராஃப், ரித்தேஷ் தேஷ்முக், ஷரத்தா கபூர் இணைந்து நடித்துள்ள 'பாகி 3' திரைப்படம் கடந்த மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படம் தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆர்யா இணைந்து நடித்த 'வேட்டை' படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

தல தோனி ரெய்னாவுடன் இணைந்து பாகி 3 படம் பார்த்தார் | Thala Dhoni and Raina watched Baaghi 3 at Chennai Sathyam Cinemas

People looking for online information on Baaghi 3, MS dhoni, Raina, Tiger Shroff will find this news story useful.