தமிழ் சினிமாவில் ஒரே நாளில் 3 திரைக்கலைஞர்கள் ஒரே நாளில் மரணம் அடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | விஜய் திரை வாழ்வில் மிகப்பெரிய தொகையா..? Thalapathy 67 சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய நிறுவனம்?
தமிழில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் E.ராமதாஸ். இயக்குனராக தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், வசூல் ராஜா MBBS, யுத்தம் செய், விக்ரம் வேதா, விசாரணை, தர்மதுரை, அறம், காக்கி சட்டை, மெட்ரோ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகராகவும் நடித்துள்ள இவரது மறைவுக்கு பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இதேபோல், நடிகர் ஷாந்தனு, ராமகிருஷ்ணா என்கிற இளைஞரின் புகைப்படத்தை பகிர்ந்து, "ஒரு சிறந்த நண்பனை நேற்று இரவு இழந்து விட்டேன். ஒரு ஆர்வமுள்ள, மிகவும் திறமையான இளம் இயக்குனர். 26 வயது தான் ஆகிறது. தீய பழக்கங்கள் எதுவும் இல்லை. ஆரோக்கியமான வாழ்க்கை முறை. ஆனால், கடவுள் அவரை சீக்கிரம் அழைத்து சென்றார். அவர் வேலையில் இருக்கும் போது திடீரென சரிந்து உயிரிழந்தார்.
வாழ்க்கை என்பது நிச்சயமற்றது. வாழ்க்கை என்பது நியாயமற்றது. தன்னை காப்பாற்றி கொள்ள ஒரு கால அவகாசம் கூட அவருக்கு வழங்கப்படவில்லை. கீழே சரிந்து சில நிமிடங்களில் இறந்து விட்டார். இதில் மோசமான விஷயம் என்னவென்றால், அவர் இறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்னர் தான் என்னை அழைத்திருந்தார். ஆனால், நான் அந்த அழைப்பை எடுக்கவில்லை. இப்போது அந்த அழைப்பை எடுத்திருக்க வேண்டும் என விரும்புகிறேன்." என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். 26 வயதே ஆன உதவி இளம் இயக்குனரின் இந்த மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இவர்களுடன் பிரபல இயக்குனர் மற்றும் பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் மெண்டர் ஆக இருந்து வந்த ஹரிச்சரண் சீனிவாசனின் மரணம் தென் இந்திய திரை உலகில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூவானம் என்னும் திரைப்படத்தை இயக்கி உள்ளவர் ஹரிச்சரண். சீரியல்களையும் இயக்கியுள்ள இவரது மனைவியான ரேக்ஸ் (Rekhs), நடிகர் விஜய் நடித்த வாரிசு உட்பட 13 படங்களுக்கு மேல் சப்டைட்டில் கலைஞராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | பீரியட் காமெடி-ட்ராமாவா ? சந்தானம் நடிக்கும்‘வடக்குப்பட்டி ராமசாமி’ - ஒன்லைன் இதுதான்..!