"ஆடும் போது தண்ணி குடிங்க அண்ணா" - சிவகார்த்திகேயனின் 3 வயது ரசிகையின் க்யூட் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயனின் எங்க அண்ணன் பாடலை கேட்டு 3 வயது ரசிகை போடும் ஆட்டத்தின் வீடியோ லைக்ஸை அள்ளி வருகிறது.

சிவகார்த்திகேயனின் 3 வயது ரசிகை வீடியோ | sivakarthikeyan's 3 year old fans cute video

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்கள் இவருக்கு பெரும் ரசிகர்களை பெற்றுக்கொடுத்தது. அண்மையில் இவர் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. அப்படியான அவரது ரசிகர் பட்டாளத்தில் குழந்தைகளுக்கு தனி இடம் உண்டு.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் எங்க அண்ணன் பாடலை கேட்டு 3 வயது குழந்தை ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் லைக்ஸை குவித்து வருகிறது. சிவகார்த்திகேயன் ஆடுவதை பார்த்து, தண்ணி குடிங்க என சொல்லி கொண்டே, க்யூட் ரியாக்‌ஷன்ஸ் காட்டும் குட்டி ரசிகையின் வீடியோவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனை அக்குழந்தையின் அப்பா டிவிட்டரில் சிவகார்த்திகேயனை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

Entertainment sub editor

சிவகார்த்திகேயனின் 3 வயது ரசிகை வீடியோ | sivakarthikeyan's 3 year old fans cute video

People looking for online information on Sivakarthikeyan will find this news story useful.