சிவா தமிழ் படம் பார்ட் 3 எப்போ ? - இயக்குநர் அதிரடி தகவல் - அப்போ இந்த தடவ ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ஸ்பூஃப் வகை படமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'தமிழ் படம்'. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடித்திருந்த இந்த படம் தமிழ் படங்களில் டெம்ப்ளேட்டாக வரும் சில விஷயங்களை காமெடி செய்யும் விதமாக படமாக்கப்பட்டிருந்தது.

சிவாவின் தமிழ் படம் 3 குறித்து இயக்குநர் சிஎஸ் அமுதன் கமெண்ட் | Director CS Amudhan comments about Siva's Tamil Padam 3

அதனைத் தொடர்ந்து இரண்டாவது பாகமாக 'தமிழ் படம் 2' கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த முறை சினிமா மட்டுமல்ல, தமிழகத்தின் சில முக்கிய அரசியல் நிகழ்வுகளும் வைத்து செய்யப்பட்டிருந்தது. 

'தமிழ் படம் 2'வின் போதே மூன்றாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் 'தமிழ் படம் 3' குறித்து கேள்வி எழுப்ப அதற்கு இயக்குநர் சி.எஸ்.அமுதன் 2022 ஆம் ஆண்டு வெளியாகலாம் என்று தெரிவித்தார். முதல் பார்ட் சினிமா, இரண்டாவது பார்ட் சினிமா மற்றும் அரசியல், அப்போ மூன்றாம் பாகம் எதைப் பற்றி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Entertainment sub editor

சிவாவின் தமிழ் படம் 3 குறித்து இயக்குநர் சிஎஸ் அமுதன் கமெண்ட் | Director CS Amudhan comments about Siva's Tamil Padam 3

People looking for online information on CS Amudhan, Siva, Tamil padam 3 will find this news story useful.