www.garudavega.com

BOX OFFICE: சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் முதல் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், எஸ் கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள டாக்டர் (Doctor) திரைப்படம் படம் கடந்த சனிக்கிழமை அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது.

2nd day collection of the movie Doctor starring Sivakarthikeyan

இந்த டாக்டர் திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும்  தமிழில் வெளியான அதே நாளில் வருண் டாக்டர் (Varun Doctor) என்ற பெயரில் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த டாக்டர் திரைப்படம். குழந்தைகள் கடத்தல் பற்றிய இந்த படத்தின் பிளாக் காமெடி காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

2nd day collection of the movie Doctor starring Sivakarthikeyan

இந்நிலையில் இந்த படத்தின் வசூல் பற்றிய நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. முதல் நாளில் டாக்டர் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 7.36 கோடி ரூபாயை வசூலித்தது. மேலும் இரண்டாவது நாளில் டாக்டர் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமாராக 8.05 கோடி ரூபாயை வசூலித்தது. மூன்றாவது நாளான நேற்று 4.76 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே தற்போது திரையரங்கினுள் அனுமதி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2nd day collection of the movie Doctor starring Sivakarthikeyan

முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் 20.17 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

2nd day collection of the movie Doctor starring Sivakarthikeyan

People looking for online information on Doctor, Sivakarthikeyan will find this news story useful.