தமிழில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரைப்படங்களை தயாரித்தும், விநியோகித்தும் வந்தவர் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.
குறிப்பாக Behindwoods-ல் பிக்பாஸ் குறித்த தமது பார்வையை முன்வைக்கும் நிகழ்ச்சியை வழங்கிவந்த ரவீந்தர், FATMAN என்கிற அடையாளத்தால் இணையவழி நிகழ்ச்சிகளில் அறியப்படுவர். கடைசியாக ரவீந்தர் தயாரிப்பில் சாந்தனு பாக்கியராஜ், அதுல்யா ரவி நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் வெளியாகி இருந்தது.
இந்நிலையில்தான், தயாரிப்பாளர் ரவீந்தருக்கு பிரபல விஜே மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டுள்ளார். 2000த்துக்கு பின் 90ஸ் கிட்ஸ் மத்தியில் ஆங்கராக பரிச்சயமானவர் விஜே மகாலட்சுமி. அதன்பிறகு, சின்னத்திரை நடிகையாக வலம் வந்த விஜே மகாலட்சுமி, சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கும்தான் திருப்பதி கோயிலில் திருமணம் நடைபெற்றது.
இதுகுறித்து அந்த சமயத்தில் தயாரிப்பாளர் ரவீந்தர் தம்முடைய வலைப்பக்கத்தில், “மஹாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடச்சா வாழ்க்கை நல்லா இருக்குனு சொல்லவாங்க., ஆனா அந்த மகாலட்சுமியே வாழ்க்கையை கிடச்சா...குட்டி ஸ்டோரி வித் மை பொண்டாட்டி!'” என பதிவிட்டு விஜே மகாலட்சுமிக்கு தாலி கட்டும் திருமண புகைப்படங்களை பதிவிட்டார். இந்த புகைப்படங்கள் வைரலாகின.
முன்னதாக பிஹைண்ட்வுட்ஸ்க்கு பிரத்தியேக பேட்டியளித்திருந்த மகாலட்சுமி, “எனக்கு அவர் இப்படி இருப்பது பிரச்சனையாக தோன்றவில்லை. எனக்கே ஏதும் தோன்றாத போது, நீங்கள் ஏன் அதை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் நான் அவரிடம் கேட்பேன். அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே எனக்கு பிடிக்கும். அவ்வளவு தான். உடம்பை குறைப்பதற்கான முயற்சிகள் பற்றி என்னிடம் சொல்வார். நான் அப்படி எதையும் செய்து விட வேண்டாம் என்று தான் கூறுவேன். உடல் ஆரோக்கியத்தை மட்டும் பார்த்துக் கொண்டால் போதும்” என்று கூறி இருந்தார்.
இந்நிலையில், ரசிகர்கள் பதிவிட்டுள்ள தங்களது புகைப்படத்தை தமது இன்ஸ்டாவில் பகிர்ந்த, மகாலட்சுமி ரவீந்தர், ‘2K Couples’ என கேப்ஷன் போட்டுள்ளார். இந்த பதிவு செம்ம வைரலாகி வருகிறது. முன்னதாக விமர்சனங்கள் குறித்து பேசி இருந்த மகாலட்சுமி ரவீந்தர், “இந்த விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களை பார்க்கும் போது, ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற விஷயம் தான் அதிகமாகிறது.. அதற்காக அவர்களுக்கு நன்றிகள்” என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.