Vilangu Others
www.garudavega.com

22 YEARS OF HEY RAM: ஹே ராம் படத்தில் இதையெல்லாம் கவனிச்சிருக்கீங்களா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: கமல்ஹாசன், ஷாருக்கான் நடிப்பில் ஹே ராம் படம் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் ஆகிறது.

22 Years Of Hey Ram Kamal Haasan Shah Rukh Khan Indian Cinema

நடிகை கௌரி கிஷன் வாங்கிய விலையுயர்ந்த ஜெர்மனி நாட்டு கார்! விலை எவ்வளவு தெரியுமா? முழு தகவல்

காலம் கடந்தும் கொண்டாடப்படும் மிக முக்கிய படைப்பு ஹே ராம். காந்தியிசத்தை அடிப்படையாக கொண்டு வரலாற்று புனைவை இயக்குனர் கமல் அமைத்திருப்பார்.

"கலை அழகாக இருக்க வேண்டும், ஆனால் அதற்கு முன், அது உண்மையாக இருக்க வேண்டும்" என்ற ரவீந்திரநாத் தாகூரின் வார்த்தைகளுக்கு ஏற்ப படத்தின் கலை இயக்கம், ஒளிப்பதிவு, இயக்கத்தில் உண்மைக்கு நெருக்கமாக ஹே ராம் படத்தை கமல் படைத்திருப்பார்.

கேசவ் பலிராம் ஹெட்கேவார் - நிறுவனர், நாதுராம் கோட்சே - செயற்பாட்டாளர், எம்.எஸ்.கோல்வால்கர் - தலைவர் ஆகியோரின் கதாபாத்திரங்களை திரையில் கொண்டு வர அதே போல உருவ ஒற்றுமை உடையவர்களை கமல் நடிக்க வைத்திருப்பார்.

22 Years Of Hey Ram Kamal Haasan Shah Rukh Khan Indian Cinema

மிகச் சிறந்த உலக சினிமாக்களில் உருவகம் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ஹே ராம் படத்தில் யானை, பியானோ, துப்பாக்கி, பிரிட்டிஷ் இந்திய வரைபடம், கிளைமாக்ஸ் காட்சியில் உருவாகும் நெருப்பு ஆகியவை இதில் முக்கியமானது. கல்கத்தாவில் இருந்து திருச்சிக்கு கமல் (சாகேத் ராம்) வரும்  காட்சியில் யானை உருவகத்துக்கு தகுந்தாற் போல மதங்கொண்ட வேழம் போல திரிகின்றேன்...  பண்டு நான்கு விதம் கொண்ட மறைகள் போற்றும் அரங்கமா நகரு ளானே. பாடலும் பின் ஒலிக்கும்.

22 Years Of Hey Ram Kamal Haasan Shah Rukh Khan Indian Cinema

சில படங்கள் நமக்குள் தாக்கத்தை ஏற்படுத்த ஒரு காட்சியே போதுமானது. இரண்டாம் பாதியில் லால்வானியை கமல் (ஸாகேத் ராம்) சந்திக்கும் காட்சி அது.

அவர்களின் உரையாடல்

சாகேத்ராம் : பீனா‌ அண்ணி எங்கே?

லால்வானி‌: மானம் உயிர் ரெண்டும் போச்சு, பெரிய மகள் அகதி முகாமில் காலரா வந்து செத்துட்டா .

சாகேத்ராம்: சின்ன மகள்... (பெயரை நினைவுபடுத்தி) ரொமீலா.

லால்வானி: (வெதும்பி) பேரெல்லாம் கூட  நெனப்பு இருக்கா? குழந்தை அகதி முகாமில் கை தவறிப் போய்டுச்சு, கூட்டத்தில் கண்டுபிடிக்க முடியல.

"நீ ஒரு தென்னிந்தியன் இது எல்லாம் உனக்குப் புரியாது".

சாகேத் ராம் : புரியும் ,எனக்கும் புரியும்.

இந்திய பிரிவினையின் கோரமுகத்தை ஒரே காட்சியில் வெளிப்படுத்தியிருப்பார் ஹேராம் இயக்குனரும் திரைக்கதை ஆசிரியருமான கமல்ஹாசன்.

இந்த படம் ARRIFLEX 35BL4 கேமராவால் எடுக்கப்பட்டது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் திரு ISC. இந்த படம் முழுக்க செபியா டோனை முதன்மையாக கொண்டு   நீல நிறம் இல்லாமல் ஒளிப்பதிவு செய்து இருப்பார். நீலநிறம் எந்த படத்துக்கும் ஒரு contemporary liveliness தருவதால் தான் அகில உலக அளவில் நீல நிறத்தை வரலாற்றுப் படங்களில் பயன்படுத்துவதில்லை.

22 Years Of Hey Ram Kamal Haasan Shah Rukh Khan Indian Cinema

இருப்பினும் இந்த படத்தின் 2 காட்சியில் 3 ஷாட்டில் மட்டும் நீல வண்ணம் குறுக்கிட்டுவிடும். அதை சூழல் காரணமாக நீக்க முடியாமல் போனதாக பின்னாளில் படக்குழு சார்பில் சரிகா கூறினார்.  மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சி பகுதியில் இருந்து மேலே பார்க்கும் காட்சியும் (2 ஷாட்), சாகேத் ராம் டெல்லி மரினா ஓட்டலுக்கு காரில் வரும் காட்சியும் (1 ஷாட்) அடங்கும்.

22 Years Of Hey Ram Kamal Haasan Shah Rukh Khan Indian Cinema

இது தமிழ் படமல்ல... இந்தியப்படம் என சொல்லியே கமல் இந்த படத்தை வெளியிட்டார். இத்திரைப்படம் தமிழ், இந்தி என இரு மொழியிலும் எடுக்கப்பட்டதாகும். இத்திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், ஷாருக் கான், ராணி முகர்ஜி, அதுல் குல்கர்னி, ஹேம மாலினி, கிரீஷ் கர்னாட், நசிருதீன் ஷா, வசுந்தரா தாஸ் நடித்திருந்தனர். கமல்ஹாசனே இப்படத்தை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்தார்.

இசைஞானி இளையாராஜ இசையமைத்தார். இத்திரைப்படம் இந்தியாவின் சார்பில் அந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது பெறுவதற்கான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மூன்று தேசிய விருதுகளை வென்றது ஹேராம்.

OTT-யில் இன்று ரிலீஸ் ஆகும் இந்திய படங்கள்.. எது? & எப்ப?.. Full List ரெடி!.. Week End- அ மாஸ் பன்னுங்க!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

22 Years Of Hey Ram Kamal Haasan Shah Rukh Khan Indian Cinema

People looking for online information on 22 Years Of Hey Ram, கமல்ஹாசன், ஷாருக்கான், ஹே ராம், Kamal Haasan, Shah Rukh Khan Indian will find this news story useful.