RRR Others USA
www.garudavega.com

நாம் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருந்தா.. சமந்தா போட்ட வைரல் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : 2022ஆம் ஆண்டில் நாம் என்னென்ன பழக்கவழக்கங்கள் மற்றும் என்னென்ன கவனமாக செய்ய வேண்டும் என்பதை பலரும்  பதி விடுவார்கள். அதுபோல் நடிகை சமந்தா 2022ல் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை வரிசையாக பதிவிட்டுள்ளார்.

2022 resolution and advice given by Samantha for her fans

ஓ சொல்றியா மாமா:

                   தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சமந்தா. சமீபத்தில் புஷ்பா படத்தில் உள்ள ஓ சொல்றியா மாமா  பாடல் உலகம் முழுவதும் பட்டிதொட்டியெல்லாம் பரவியது. மேலும் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து தற்போது விவாகரத்தும் ஆனது. இந்நிலையில் அவர் தற்போது நம் வாழ்க்கைத் துணையை சரியாக தேர்வு செய்ய வேண்டும் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2022 resolution and advice given by Samantha for her fans

வாழ்க்கைத் துணை:

   சமந்தா பதிவிட்டுள்ள வீடியோவில், " நம் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அதுதான் நாம் 90%  வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்போமா என்னது கஷ்டப்படுவோமா என்பதை முடிவு செய்யும். அதனால் கவனமாக இருக்க வேண்டும்" என்பதை அதில் பதிவிட்டிருந்தார்.

மகள் கொடுத்த அன்பளிப்பு.. நெகிழ்ந்து போன ரோபோ சங்கர்! அப்படி என்ன கொடுத்தாங்கனு பாருங்க!

2022 resolution and advice given by Samantha for her fans

தைரியம் மற்றும் தன்னம்பிக்கை:

                      நாம் எப்பொழுதும் மிகவும் தைரியமாகவும், தன்னம்பிக்கையாகவும் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தைரியமாக இருப்பது போல் நடந்து கொள்ள வேண்டும். அப்படி செய்யும் பொழுது வித்தியாசம் தெரியாது. நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு மட்டும் கொடுங்கள். மூன்றாவது வாய்ப்பு என்பதை எக்காரணத்தாலும் கொடுக்காதீர்கள். இது நம் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதிலும் பொருந்தும் என்று  கூறியுள்ளார்.

ஆத்தி.. இது listலயே இல்லயே! பாவனியவே நாமினேட் செஞ்சுட்டாரே அமீர்! அவரே சொன்ன பரபரப்பு காரணம்!

முடிவு நம் கையில் தான்:

            வேறு யாரும் உங்கள் வாழ்க்கைக்கான முடிவு எடுக்க விடாதீர்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். காதலுக்காக மட்டும் திருமணம் செய்யுங்கள். மேலும், வாழ்க்கை எப்போதும் நேர்மையாக இருக்கும் என எண்ணாதீர்கள். அதன்பின் உங்கள் குணாதிசயங்களையும் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

2022 resolution and advice given by Samantha for her fans

வரிசையான கருத்துகள்:

                   எப்பொழுது ரொமாண்டிக்காக இருங்கள். வாழ்க்கையில் எப்ப வேண்டுமென்றாலும் அதிசயம் நடக்கலாம். மேலும் இதுபோன்ற கருத்துக்களை வரிசையாக சமந்தா அதில் குறிப்பிட்டிருந்தார். சமந்தா கொஞ்ச நாட்களாகவே வாழ்க்கை பற்றிய விஷயங்களை நிறைய பகிர்ந்து வருகிறார். புஷ்பா படத்தின் பாடல் உலகம் முழுவதும் வைரலாகியதை தொடர்ந்து நடிக்க சமந்தா தற்போது அடிக்கடி டிரெண்டாகி வருகிறார்.

நாம் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருந்தா.. சமந்தா போட்ட வைரல் பதிவு! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

2022 resolution and advice given by Samantha for her fans

People looking for online information on 2022 resolution, சமந்தா, New year, Samantha will find this news story useful.