துப்பறிவாளன் 2 படம் தொடர்பாக விஷால், மிஷ்கின் இடையே சண்டை வெடித்தது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் மனவருத்தம் காரணமாக மிஷ்கின் அந்த படத்தில் இருந்து விலகினார். மீதம் இருக்கும் படத்தை நடிகர் விஷால் இயக்க போவதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் நேற்று நடந்த ஒரு வெப் சீரிஸ் விழாவில் பேசிய மிஷ்கின் விஷால் மீது அதிரடி குற்றச்சாட்டுகளை வைத்தார். அதில் அவர் "நான் கஷ்டப்பட்டு எழுதிய கதை அது. உன்னை சும்மா விடமாட்டேன். நீ என்ன எம்.ஜி.ஆரா, கலைஞரா.. சமூகம் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறது. சம்பளம் பற்றி பேசிய போது அவருக்கும் எனக்கும் மனஸ்தாபம் வந்தது. நான் எழுந்து வெளியே நடந்து போனேன்."
"அப்போது அவர் என் அம்மாவை பற்றி தவறான வார்த்தையில் திட்டினார். அதை கேட்ட என் தம்பியை அடித்தார்கள். என் தாயைத் திட்டியதற்குப் பிறகு எப்படி படத்திலிருந்து வெளியே போகாமல் இருக்க முடியும். தம்பி விஷாலு.. உன் வேலையை எல்லாம் இங்கு காட்டாதே. உனக்கு இருக்கு ஆப்பு. இது தான் தொடக்கம். இன்று முதல் நீ தூங்கவே மாட்டாய். உன் தரப்பில் நியாயம் இருந்தால் வா குருஷேத்ரப் போருக்கு. வா போரிடலாம்" என்று சொல்லி முடித்தார். விஷால், மிஷ்கின் சண்டை இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.