பிக்பாஸ் வீட்டில் அடுத்தடுத்த டாஸ்குகள் பரபரப்பை உருவாக்கி இருந்தன. அவற்றை கடந்து கடைசியாக டிவி டிபேட் ஷோ டாஸ்க் நடத்தப்பட்டது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் வொர்ஸ்ட் பெர்ஃபார்மர் யார் என்பது குறித்து பிக்பாஸ், ஹவுஸ்மேட்ஸிடம் கேட்கிறார். லிவிங் ஏரியாவில் வரிசையாக அமர்ந்திருந்த ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவரும் 2 பேரை வொர்ஸ்ட் பெர்ஃபார்மர் என அறிவிக்க வேண்டும், அதாவது முன்மொழிய வேண்டும்.
இதற்கென அனைத்து ஹவுஸ்மேட்ஸூம் தங்கள் பங்குக்கு 2 சக போட்டியாளர்களின் பெயர்களை உச்சரிக்கின்றனர். அதன்படி பலரும் நிரூப் மற்றும் பாவனி பெயரை, குறிப்பிடுகின்றனர். ஒட்டுமொத்தமாக, இதில் இருந்து முடிவில் 2 பேர் வொர்ஸ்ட் பெர்ஃபார்மர் என்று தீர்மானிக்கப்படுகின்றனர்.
அவர்கள் தான் நிரூப் மற்றும் பாவனி, இதனை பிக்பாஸ் பகிரங்கமாக அறிவிக்கிறார். இதனை அடுத்து நிரூப் மற்றும் பாவனி இருவரும் பாதாள சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். என்னதான் பாவனிக்கு இது முதல்முறைதான்.
என்றாலும், முன்னதாக காயின் டாஸ்க், அதன் பிறகு பள்ளி கால நினைவுகள் டாஸ்க் ஆகியவற்றின்போதும் பாதாள சிறைக்கு சென்ற பட்ட கால்லயே படும், சுட்ட இடத்துலயே சுடும் என்பது போல், நிரூப் 3-வது முறையாக பிக்பாஸ் வீட்டுக்குள் சிறை சென்றிருக்கிறார்.