கேஜிஎப் 2 திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வருகிறது.
Also Read | மாஸ்டர் J D பாட்டுக்கு குழந்தைகளோடு ஆடிய ’பீஸ்ட்’ வீரராகவன்… வைரலாகும் ‘பீஸ்ட்’ BTS வீடியோ!
10,000 திரைகளில்…
ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் 2'. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, இந்திய அளவில் வசூலை வாரி குவித்தது. இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’ திரைப்படம், நேற்று ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக 10000 திரைகளில் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. கேஜிஎப் கன்னடத்தில் உருவான படமாக இருந்தாலும் ஒவ்வொரு மொழியிலும் ரசிகர்கள் அதை தங்கள் மொழிப் படமாகவே பார்க்கிறார்கள்.
செதுக்கிய கலைஞர்கள்…
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியுள்ள 'கே ஜி எஃப் 2' படத்தில் கதையின் நாயகனாக ராக் ஸ்டார் யஷ் நடித்திருக்கிறார். இவருடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார். உஜ்வல் குல்கர்னி இந்த படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
நேற்று படம் வெளியாகியுள்ள நிலையில் காலை சிறப்புக் காட்சிகள் முடிந்து ரசிகர்களின் பாராட்டைப் படம் பெற்று வருகிறது. தமிழகத்தில் இந்த படம் 350 திரைகளில் வெளியான நிலையில் அதிகமான வரவேற்பை அடுத்து கூடுதல் திரைகளை ஒதுக்க உள்ளதாக விநியோகஸ்தர் எஸ் ஆர் பிரபு அறிவித்துள்ளார்.
கவனம் ஈர்த்த படத்தொகுப்பாளர்….
இந்நிலையில் இந்த படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்திய சினிமவையே கலக்கிக் கொண்டு இருக்கும் இந்த படத்தின் எடிட்டராக பணியாற்றியது 19 வயது உஜ்வல் குல்கர்னி என்ற இளைஞராம். யுடியூபில் fan made வீடியோக்களை உருவாக்கி வந்த இவர் கேஜிஎப் முதல் பாகத்தின் வீடியோக்களை எடிட் செய்துள்ளார். அதைப் பார்த்து கவர்ந்த கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் அவரையே இரண்டாம் பாகத்தை எடிட் செய்ய நியமித்துள்ளாராம். இந்த தகவல் சினிமா ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | முதல் முறையாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'வலிமை' திரைப்படம்.. எப்போ? எதுல?