ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் ரஜினியின் எந்திரன் திரைப்படம் குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எந்திரன். ரஜினி, ஐஷ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படத்தை ஷங்கர் இயக்கினார். சையின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் உருவான இத்திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்ததுடன், படத்தின் ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங் பெரிய அளவில் பேசப்பட்டது. குறிப்பாக படத்தின் க்ராபிக்ஸ் காட்சிகளை தமிழ் சினிமா ரசிகர்களை கொண்டாடினார்கள்.
இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளரான ரிச்ச்சர்ட் எம் நாதன், எந்திரன் படத்திற்காக போட்டோஷூட் நடத்தியது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், ''இந்த புகைப்படங்கள் நான் 2008-ல் எந்திரன் போட்டோஷூட்டில் எடுத்தவை. இதை மக்கள் க்ராபிக்ஸ் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் இது உண்மையாகவே எடுக்கப்பட்ட புகைப்படங்கள். இந்த போட்டோஷூட்டுக்காக ரஜினி சார் ரொம்பவே மெனக்கெட்டார்'' என பதிவிட்டுள்ளார். ரிச்சர்ட் எம் நாதனின் இந்த பதிவு, சோஷியல் மீடியா ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
This was a photoshoot I did for #enthiran in 2008.
Ppl thot it was CGI, it's not. Thalaivar was pained for the shoot. Check the unreleased second photo. @shankarshanmugh #throwback #alwaysthalaivar #superstar pic.twitter.com/UNkyNCNNIc
— Richard M Nathan (@Richardmnathan) June 24, 2020