சென்னை: கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளில் குறைக்கப்பட்ட பார்வையாளர்கள் அனுமதி குறித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கைதி -2 மற்றும் கைதி ரீமேக்குக்கு கிரீன் சிக்னல்! நீதிமன்றம் கொடுத்த பரபர தீர்ப்பு
தமிழகத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு 2020 மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து திரையரங்குகள் மூடப்பட்டன. 250 நாட்களுக்கு பிறகு கடந்த 2021 ஆண்டு நவம்பர் மாதத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டு 50 சதவீதப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். மீண்டும் கொரோனா 2-ம் அலைப் பரவலால் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டன.
கொரோனா பெருந்தொற்று காரணமாக திரையரங்குகள் திறக்கமால் இருந்தது. பின்னர் தமிழக அரசு 2021 ஆகஸ்ட் முதல் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்தது. பின்னர் இது 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஜனவரி மாதம் 1 முதல் இன்று வரை தமிழக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு (பார்வையாளர்கள்) மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோணா பாதிப்பும் கட்டுக்குள் இருப்பதால் தற்போது தமிழக அரசு தியேட்டரில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 100 சதவீத பார்வையாளர்களுக்கு பிப்ரவரி 16 முதல் அனுமதி அளித்துள்ளது. இதே போல் உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 24 அன்று வலிமை படம் திரைக்கு வர உள்ளது. பொங்கல், தீபாவளி காலங்களில் தமிழ் நாட்டில் சினிமா டிக்கெட் விற்பனை மூலம் மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் குறைந்தபட்சம் வசூல் ஆகும். இது ரஜினி, அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்களுக்கே இதுவரை நடந்துள்ளது. பெரிய படங்கள் வராததால் தமிழக சினிமா தியேட்டர்கள் நலிவடைந்துள்ளன. தற்போதைய 100% பார்வையாளர் அனுமதி திரையரங்க உரிமையாளர்களுக்கு வயிற்றில் பால் வார்க்கப்பட்டுள்ளது.
ரேவதி இயக்கத்தில் நம்ம கஜோல்! ஆஹா அசரவைக்கும் ஃபோட்டோவுடன் வெளியான அப்டேட்!