தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கொடுப்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் போட்டப்பட்ட ஊரடங்கு உத்தரவையடுத்து, திரையரங்குகள் மூடப்பட்டன. இதையடுத்து வைரல் தொற்று கட்டுப்படுத்த பின்னர், 50 சதவீத இருக்கைகளுடன் திறக்க அனுமதியளிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது பொங்கலுக்கு திரைப்படங்களை வெளியிடவுள்ள நிலையில், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக நடிகர் விஜய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.

இந்நிலையில் தற்போது அரசாங்கத்தின் தரப்பில் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதியளித்துள்ளது தமிழக அரசு. மேலும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாகமாக சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.