விஜய் டிவி புகழ் பாலாஜி இன்று காலை சென்னையில் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரது காமெடிகள் ரசிகர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்துள்ளன. அவரது இறப்பு உண்மையில் பலருக்கும் பெரிய இழப்பாகவே இருக்கிறது. கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருந்தார் பாலாஜி.
இதனையடுத்து விஜய் டிவி-யை சேர்ந்த பலரும் இந்த செய்தியினால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமீபத்தில் விஜய் டிவியில் வடிவேல் பாலாஜி மற்றும் அவரது மனைவி கலந்து கொண்டனர். அறந்தாங்கி நிஷா அதானி தொகுத்து வழங்கினார். அவர் கூறும்போது "அண்ணா, ஒன்னா சாப்பிட்டோம் என்ன உங்க தங்கச்சியா வே நினைச்சிங்களா என்னால நம்ப முடியல உங்க ஆன்மா சாந்தி அடையட்டும் மிஸ் யூ அண்ணா என்று நிஷா வேதனையுடன் கூறியுள்ளார்.