நடிகர் விஜய் கலந்துகொண்ட நேருக்கு நேர் நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
விஜய்யின் நேருக்கு நேர்….
பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதை அதன் ப்ரமோஷனுக்காக விஜய், சன் தொலைக்காட்சியில் நேருக்கு நேர் என்ற நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு, நடிகர் விஜய் அளிக்கும் பேட்டி ஆகும். இந்த நேர்காணலை படத்தின் இயக்குனர் நெல்சனே எடுத்துள்ளார். இது சம்மந்தமாக வெளியான ப்ரோமோக்கள் இணையத்தில் வைரலாகின. இதையடுத்து அந்த நிகழ்ச்சி நேற்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இவ்ளோ இடைவெளி ஏன்?....
இந்த படத்தின் ரிலீஸை ஒட்டி 10 ஆண்டுகளுக்கு பிறகு, நடிகர் விஜய் அளிக்கும் பேட்டி ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நேர்காணலை படத்தின் இயக்குனர் நெல்சனே எடுத்துள்ளார். இது சம்மந்தமாக வெளியான ப்ரோமோக்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் தற்போது பேட்டி ஒளிபரப்பாகி வரும் நிலையில் நெல்சன் விஜய்யிடம் ’10 வருஷமா ஏன் எந்தவொரு பேட்டியும் கொடுக்கல” எனக் கேட்கிறார். அதற்கு விஜய் ’ஒரு இன்சிடண்ட் நடந்தது 10 வருஷத்துக்கு முன்ன. நான் சொன்ன ஒரு வார்த்தய எழுதும்போதும் அது தப்பா கன்வே ஆயிடுச்சு. என் ப்ரண்ட்ஸ் குடும்பத்துல உள்ளவங்க எல்லாம் என்ன கூப்டு கேட்டாங்க. என்ன இவ்ளோ திமிரா பேசிருக்க, நீ இப்படிலாம் பேசமாட்டியே என கோவிச்சிக்கிட்டாங்க. அவங்களுக்கு நான் என்ன புரிய வச்சுட்டேன். ஆனால் அத படிச்ச எல்லோருக்கும் நான் புரிய வைக்க முடியாதுல. இது என்னடா வம்பா போச்சுனு அப்படியே சைலண்ட் ஆயிட்டேன்.’ எனக் கூறியுள்ளார்.
விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி…
இந்த பேட்டியில் நெல்சன் விஜய்யிடம் ஏதாவது ’குட்டி ஸ்டோரி ஒன்று சொல்லுங்க’ எனக் கேட்க முதலில் ‘ஸ்டாக் ஒன்னும் இல்ல’ எனக் கூறினார். பின்னர் நெல்சன் மீண்டும் கேட்கவே ஒரு கதையை சொன்னார். அதில் ‘ஒரு புட்பாலும், புல்லாங்குழலும் ஒரு நாள் பேசிட்டு இருந்தாங்க. அதுல புட்பால் ‘நீயும் காத்துதான் உள்ள வச்சிருக்க, நானும் காத்துதான் வச்சிருக்கேன். ஆனா உனக்க்கு எல்லோரும் முத்தம் கொடுக்குறாங்க… என்ன மட்டும் ஏன் ஒதைக்குறாங்கன்னு’ கேட்டுச்சு. அதுக்கு ‘புல்லாங்குழல் நீ உனக்குள்ள இருக்குற காத்த உள்ளயே அடக்கி வச்சுக்குற, அதனால ஒன்ன ஒதைக்குறாங்க… ஆனா நான் எனக்குள்ள இருக்குற காத்த இசையா எல்லோருக்கும் கொடுக்குறேன். அதனால முத்தம் கொடுக்குறாங்க. சுயநலமா இருந்தா மிதிதான் கிடைக்கும் என சொல்லுச்சாம்’ எனக் கூறினார்.