பொள்ளாச்சி விவகாரம் குறித்து நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் Behindwoods தளத்துக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
''பயம் இல்லனா தப்பு நடந்துகிட்டே தான் இருக்கும். அதனால் பயத்தை சரியான தண்டனை கொடுப்பது மூலமாவே ஏற்படும்.
ஆனால் நாம் வழங்கும் தண்டனைகள் மிகவும் பலவீனமாக இருக்கிறது. என்ன தப்பு பண்ணாலும் சிறைக்கு சென்று உடனடியாக வெளியே வந்து விடுகிறார்கள். அப்படி இருக்குறதுனால தொடர்ந்து குற்றங்கள் அதிகமாகிக் கொண்டே போகிறது.
ஒரு ஆணால் ஒரு பெண் பாதிக்கப்பட்டிருந்தால் நம் சமூகம் பெண்ணின் மீது கோபத்தை காட்டுகிறது. பெண்ணிடம், உங்களை யார் இதனை செய்யச் சொன்னா? உங்களை யார் காலேஜ் போகச் சொன்னா? என்று கேட்கிறோம். ஆனால் நம் கோபத்தை காட்ட வேண்டியது தப்பு செய்த ஆணின் மேல்.
பின்னர் தொகுப்பாளர் மீடூ விவகாரத்துக்கு குரல் கொடுத்த பெரும்பாலான திரை பிரபலங்கள் கூட இந்த விவகாரம் குறித்து பேசவில்லையே என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வரலக்ஷ்மி,
மீடு விவகாரத்திலும் நிறைய நடிகர்கள் பேசவில்லை. யாருமே எதுவுமே சொல்லவில்லை. அதே மாதிரி தான் இதுக்கும். எல்லோரும் அமைதியா இருக்காங்க. இத பத்தி பேசக் கூடாது. நமக்கு எதுக்குனு போறாங்க. எப்ப உங்க வீட்லோ நடக்குதோ அப்போ தான் புரியும். நமக்கு முன்னாடியே மாறினா நமக்கு நல்லது.
ஒருவேளை நாளைக்கு உங்களுக்கு நடந்ததுனா அப்ப நீங்க ஃபீல் பண்ணுவிங்க. நமக்கு இதற்கு குரல் கொடுத்திருந்தா? மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தா நமக்கு இப்படிலா நடந்துருக்காதோனு நினப்பாங்க.
எல்லோரும் சுயநலவாதிகள். எல்லோருமே டாப்ல இருப்பாங்க. நம்பர் 1 நிலையில் இருப்பாங்க ஆனா எதற்கும் பேசமாட்டாங்க. ஆனா அவங்க குரல்கொடுத்தா ஜனங்க கேட்பாங்க'' என்றார்.