படம் பார்த்த திருப்தியில் சூர்யா- ரிலீசுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா தயாரிப்பில் விஜயகுமார் நடித்திருக்கும் ‘உறியடி 2’ திரைப்படம் வரும் ஏப்.5ம் தேதி ரிலீசாகவுள்ளது.

Suriya is satisfied and confident with Uriyadi 2

விஜயகுமார் இயக்கி, நடித்த ‘உறியடி’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக பலரது பாராட்டுக்களை பெற்ற இப்படத்தின் 2ம் பாகத்தை நடிகர் சூர்யாவின் 2டி எண்ட்ர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

சாதி அரசியல் குறித்து பேசும் இப்படத்தினை விஜயகுமாரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் விஸ்மயா, ஷங்கர் தாஸ், அப்பாஸ், ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ சுதாகர் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

சமீபத்தில் இப்படத்தின் இறுதிப்பதிப்பை ப்ரிவியூ தியேட்டரில் பார்த்த தயாரிப்பாளர் சூர்யா, படம் நல்லபடியாக வந்திருப்பதில் மகிழ்ச்சியடைந்ததாவும், இந்த படம் வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்ததாகவும் நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

சென்சாரில் ‘யு’ சான்றிதழ் பெற்ற இப்படத்திற்கு ‘96’ திரைப்படத்திற்கு இசையமைத்த கோபி வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Suriya is satisfied and confident with Uriyadi 2

People looking for online information on 2D Entertainment, Suriya, Uriyadi 2 will find this news story useful.