நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் பல்வேறு சமூக அவலங்கள் குறித்து அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கருக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் கர்பிணி பெண்கள் வீதம் இரும்பு சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்படுகிறார்கள். ஏப்ரல் 2018 லிருந்து மார்ச் 2019 வரை ஆயிரக்கணக்கான கர்பிணி பெண்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.
இரும்புச்சத்து குறைபாடு கர்பிணி பெண்களுக்கு மட்டுமின்றி அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்தானது. தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும்.
இதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் என்ற முறையில் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைக்கு வரும் இரும்பு சத்து குறைபாடுள்ள கர்பிணி பெண்களுக்கு இலவசமாக இரும்பு சத்து உள்ள மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.