பிரபல நடிகை நிக்கி கல்ராணி தனது சிறுவயதில் நடிகர்கள் மீது இருந்த காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
‘சார்லி சாப்ளின் 2’ திரைப்படத்தை தொடர்ந்து நிக்கி கல்ராணி நடித்துள்ள ‘கீ’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனிடையே கார்த்தி நடித்த ‘தேவ்’ திரைப்படத்தில் கேமியோ ரோலில் நிக்கி கல்ராணி நடித்திருந்தார்.
சமீபத்தில் Behindwoods-தளத்துக்கு பிரத்யேக பேட்டியளித்த நடிகை நிக்கி கல்ராணி, ‘கீ’ திரைப்படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். பொதுவாக இயக்குநர்களிடம் கதை கேட்ட பின், ஓரிரு நாட்கள் எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால், கீ படத்தின் கதை பிடித்திருந்ததால் உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன் என நிக்கி கல்ராணி தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து Never Have I Ever செக்மெண்ட்டில் விளையாடிய நிக்கி கல்ராணி, சிறுவயதில் தனக்கு ஹாலிவுட் ஹீரோக்கள் பிராட் பிட், டாம் கிரூஸ் ஆகியோர் மீது காதல் ஏற்பட்டதாக தெரிவித்தார். மனிதர்களை விட நாய்கள் மீது பார்த்ததும் காதல் வந்துவிடும் என்றும் அவர் கூறினார்.