உலகமெங்கும் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான 'அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படம் இந்தியாவில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த மார்வெல் ஆன்தம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி அயர்ன் மேன் கேரக்டருக்கு தமிழில் டப் செயதுள்ளார்.
இந்நிலையில் இந்த படம் இதற்கு முன்பு அவெஞ்சர்ஸ் படங்களில் அயர்ன் மேன் வேடத்துக்கு டப் செய்தவரும், பிரபல டப்பிங் கலைஞருமான ரவி ஷங்கர் Behindwoods தளத்துக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், அயர்ன் மேன் கேரக்டர நன்றாக கவனித்து, ஹோம் ஒர்க பண்ணாலே அவரோட ஸ்டைல் பேசுனேன். அயர்ன் மேன் கேரக்டரில் நடத்த ராபர்ட் டவுணியோடபெரிய ரசிகன் நான். அவர் சொல்றத சட்டுனு சொல்லிடுவாரு. எவ்ளோ பெரிய கஷ்டமானா சீன் என்றாலும் ஈஸியா பண்ணிடுவாரு. முகத்துல எமோஷன்ஸ் காட்டமாட்டாரு என்றார்.
பின்னர் கமல் குறித்து பேசும்போது, எனக்கு மிகவும் பிடித்த நடிகர் கமல். அவர் எனக்கு ஒரு விதத்தில் குரு என்று சொல்லலாம். அவருடன் 6 படங்கள் வரை பணிபுரிந்துவிட்டேன். அவர் அவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் நான் சொன்னவுடன் ஏன் எதற்கு என்று கேட்காமல் செய்வார்.
அவர் டப்பிங் செய்யும் போது, திரையில் அவர் எந்த மாதிரி பாடி லாங்குவேஜில் நடித்திருக்கிறார். பிறகு டப்பிங் செய்யும் போது அதனை எப்படி மாடுலேட் பன்றார் என்று அறியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது' என்றார்.