நடிகர் சூர்யா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘உறியடி 2’ திரைப்படம் தொடர்பான சர்ச்சைகள் குறித்து இயக்குநர் விஜயகுமார் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
விஜயகுமார் இயக்கி, நடித்த ‘உறியடி’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக பலரது பாராட்டுக்களை பெற்ற இப்படத்தின் 2ம் பாகத்தை நடிகர் சூர்யாவின் 2டி எண்ட்ர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
சாதி அரசியல் குறித்து பேசும் இப்படத்தினை விஜயகுமாரே இயக்கி நடித்துள்ள இப்படம் இன்று (ஏப்.5) ரிலீசாகியுள்ளது. இப்படத்தில் விஸ்மயா, ஷங்கர் தாஸ், அப்பாஸ், ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ சுதாகர் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உறியடி 2 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இயக்குநர் விஜயகுமார் Behindwoods தளத்துக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அரசியல் சார்ந்த விஷயங்கள் இப்படத்தில் இருந்தாலும், இது உறியடி முதல் பாகத்தில் தொடர்ச்சி அல்ல என இயக்குநர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து ‘உறியடி 2’ திரைப்படத்தை வெளியிடவில்லை என்றும், இது எதார்த்தமாக அமைந்தது தான் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சாதி ரீதியான படங்களுக்கு நடுவே அரசியலை நேரடியாக தாக்கக் கூடிய திரைப்படங்களுக்கும் உறியடிக்கும் இருக்கும் வித்தியாசம் குறித்து பேசினார்.
‘96’ திரைப்படத்திற்கு இசையமைத்த கோபி வசந்தா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.