BREAKING : வைபவுடன் ஜோடி போடும் மற்றொரு சின்னத்திரை நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘மேயாத மான்’ திரைப்படத்தின் ஹீரோ வைபவ் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக சின்னத்திரை பிரபல நடிகை வாணி போஜன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Breaking: Vani Bhojan is the heroine for Vaibhav's next

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 - II திரைப்படத்தை தொடர்ந்து னடிகர் நிதின் சத்யா, வைபவ் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கும் முன் வெளியானது.

ஜெய், ரெபா மோனிகா நடித்த ‘ஜருகண்டி’ திரைப்படத்தை தொடர்ந்து நிதின் சத்யா தயாரிப்பில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படத்தில் நாயகனாக வைபவ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை வாணி போஜனுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

அறிமுக இயக்குநர் பிரபு சார்லஸ் இயக்கவிருக்கும் இப்படம் சஸ்பன்ஸ் த்ரில்லர் படமாக உருவாகவுள்ளது. ஏற்கனவே வைபவ் நடித்த ‘மேயாத மான்’ திரைப்படத்திலும், சின்னத்திரை பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Breaking: Vani Bhojan is the heroine for Vaibhav's next

People looking for online information on Chennai 600028 2nd Innings, Jarugandi, Nithin Sathya, Vaibhav, Vani Bhojan will find this news story useful.