என் படத்துக்கு சசிக்குமாரின் 'சுப்ரமணியபுரம்' தான் இன்ஸ்பிரேஷன் - பிரபல பாலிவுட் இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சசிக்குமார் தனது கம்பெனி புரொடக்ஷன் சார்பாக தயாரித்து இயக்கி நடித்த படம் சுப்ரமணியுபரம். இது சசிக்குமாருக்கு முதல் படம். இந்த  படத்தில் அவருடன் ஜெய், சமுத்திரக்கனி, சுவாதி , கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

Anurag Kashyap said Sasikumar's Subramaniapuram is the inspiration for his Gangs Of wasseypur

80களில் நடப்பது போன்று இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கும். அந்த காலத்து இளைஞர்களது வாழ்வையும், அரசியல்வாதிகளின் சுயநலத்துக்காக அவர்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது பற்றியும் அப்பட்டமாக பேசியது இந்த படம்.

கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இந்த படம் தான் தனது கேங்க்ஸ் ஆப் வாசிப்பூர் படத்துக்கு தூண்டுகோலாக அமைந்தது என பல்வேறு பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த படத்தை சிறந்த படங்களில் ஒன்று என்று கொண்டாடி வருகிறார். இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பந்த்ரா எனும் நகரத்தில் பிவிஆர் குளோபல் மாலில் இந்த படம் திரையிடப்படவிருக்கிறது. இதனை இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் நேரில் கண்டுகளிக்கவிருக்கிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், என் 'கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்' படத்துக்கு  சுப்ரமணியபுரம் தான் இன்ஸ்பிரேஷன் என்று தெரிவித்துள்ளார்.

Anurag Kashyap said Sasikumar's Subramaniapuram is the inspiration for his Gangs Of wasseypur

People looking for online information on Anurag Kashyap, Jai, Samuthirakani, Sasi Kumar will find this news story useful.