கேராவேனே இத்தனை கோடியா? அதகளம் பண்ணும் ஸ்டைலிஷ் ஹீரோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு சினிமாவில் ஸ்டைல் கிங்காக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுன் விலையுயர்ந்த கேராவேன் ஒன்றை சொந்தமாக வாங்கியுள்ளார்.

Allu Arjun set to buy new caravan worth Rs 7 crore

தெலுங்கு சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர் அல்லு அர்ஜுன், ரூ.7 கோடி மதிப்பில் கேராவேன் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் இன்டீரியர் டிசைனிங் பணிகளை மும்பையில் செய்ய அல்லு அர்ஜுன் திட்டமிட்டுள்ளார். ரூ.3.5 கோடிக்கு பஸ் வாங்கி அதன் இன்டீரியர் டிசைனிங் பணிகளுக்காக சுமார் ரூ.2 முதல் 3 கோடி வரை செலவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னிந்தியாவிலேயே அதிகம் மேம்படுத்தப்பட்ட கேராவேனாக இது இருக்கும் எனவும், இதில் அல்லு அர்ஜுனின் கையெழுத்து இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. ‘ஜுலாய்’, ‘சன் ஆஃப் சத்யமூர்த்தி’ ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து 3வது முறையாக இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்குபோது அல்லு அர்ஜுன் இந்த விலையுயர்ந்த கேராவேனை பயன்படுத்துவார் என கூறப்படுகிறது.

Allu Arjun set to buy new caravan worth Rs 7 crore

People looking for online information on Allu Arjun, Caravan, Trivikram Srinivas will find this news story useful.