தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் தமிழ் செல்வன். இவர் 2002 ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். இந்நிலையில் தற்போது இவர் விடுமுறைக்கு சொந்த ஊர் வந்திருக்கிறார்.
இந்நிலையில் காஷ்மீரில் நிலவி வரும் பதட்டமான சூழ்நிலையின் காரணமாக இவருக்கு காஷ்மீர் செல்லவேண்டி இருந்தது. இதனையடுத்து இந்த தகவல் விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி என்.ஆனந்திற்கு கிடைத்துள்ளது.
இதனை அறிந்த தளபதி விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழ் செல்வனிடம் பேசியுள்ளார். அப்போது பேசிய விஜய், நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள். உங்களுக்கு எதுவும் ஆகாது. வெற்றியுடன் திரும்புவீர்கள். திரும்பி வந்தவுடன் நான் உங்களை சந்திக்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, 'எனக்கு ஏதாவது நேரிட்டால் என் போட்டாவை காட்டி அவருடன் புகைப்படம் எடுங்கள் . நான் திரும்பி வெற்றியுடன் வந்தால் உண்மையாகவே அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறேன்' என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.