பரோட்டா சுட்டு பிரச்சாரம் செய்யும் மன்சூர் அலிகான் - வைரலாகும் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் இயக்குநர் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.

Actor Mansoor Alikhan's campaign by making Paraotta and Bhajji in Dhindugal-video goes viral

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி நத்தம் செந்துரையில் பஜ்ஜி, பரோட்டா போட்டு நூதன முறையில் நடிகர் மன்சூர் அலிகான் வாக்கு சேகரித்து வருகிறார். தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மக்களோடு மக்களாக சேர்ந்து அன்றாடம் அவர்கள் செய்யும் வேலைகளை பகிர்ந்துக் கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்.

அப்படி, இன்று நத்தம் தாலுகா செந்துரை பகுதியில் வாக்கு சேகரித்த போது திடிரென டீ-கடைக்குள் சென்று பஜ்ஜி போட்டு கொடுத்தும், பரோட்டா சுட்டு கொடுத்தும் வாக்கு சேகரித்தார். இதனை பார்த்த மக்கள் ஆச்சரியமாகவும் வேட்பாளர் மன்சூர் அலிகானுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். தற்போது அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பரோட்டா சுட்டு பிரச்சாரம் செய்யும் மன்சூர் அலிகான் - வைரலாகும் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor Mansoor Alikhan's campaign by making Paraotta and Bhajji in Dhindugal-video goes viral

People looking for online information on Lok Sabha Election, Mansoor ali khan, Naam Tamil Katchi, Parotta will find this news story useful.