நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுவிக்கிறோம்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜெய்ஷ்-இ-அகமது அமைப்பு புல்வாமாவில் தாக்குதல் செய்ததைத் தொடர்ந்து இந்தியா பதிலடி தாக்குதல் செய்தது. இதனிடையே பாகிஸ்தானில் இந்திய துணை நிலை ராணுவ விமானி சிறைபிடிக்கப்பட்டார். அவர் நலமுடன் இருந்தாலும் அவரை மீட்டு வரவேண்டும் என்பது ஏகோபித்த இந்திய மக்களின் அழுத்தமான கோரிக்கையாக இருந்தது.

நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுவிக்கிறோம்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்!

இதனிடையே அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடம் சிறைபிடிக்கப்பட்டு இருந்தபோது பேசியவை வீடியோவாக இணையத்தில் வலம் வந்தது. அதில் அவர், பாகிஸ்தான் ராணுவம் தன்னை பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும், தனது நாட்டு ராணுவமும் இதுபோன்று இருப்பதையே தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டதோடு,தான் அருந்தும் டீ நன்றாக இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.  

பின்னர் அண்மைச் செய்தியாக, போர் மூளுவதற்கான வாய்ப்பு உண்டாகாமல் இருக்க, கட்டுப்பாட்டை எல்லைக்குள் நிகழ்ந்த நேர்வானத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் பிடிபட்ட இந்திய ராணுவ விமானி அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்க விரும்பவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளதோடு, இதுகுறித்த பேச்சுவார்த்தைக்கு தொலைபேசி மூலம் இந்திய பிரதமர் மோடியுடன் உரையாட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தயாராக இருப்பதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறினார். 

இதனையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,  இருநாடுகளிடையேயான அமைதியை விரும்பும் நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தானின் வசமுள்ள இந்திய ராணுவ விமானி அபிநந்தன் நிபந்தனைகளின்றி நாளை(மார்ச் 1-ஆம் தேதி) விடுவிக்கப்படவுள்ளதாக இம்ரான் கான் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இதனை அறிவித்தவுடன் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி.க்கள் அனைவரும் ஒப்புதல் தெரிவித்தனர். இதனால் நாளை வாகா எல்லையில் அபிநந்தன் ஒப்படைக்கப்படலாம் என தெரிகிறது. 

IMRANKHANPRIMEMINISTER, ABHINANDANVARTAMAN, SHAHMEHMOODQURESHI, AIRSURGICALSTRIKES, INDIAPAKISTAN