'அடுத்த மாசமே இத எதிர்பார்க்கலாம், அப்பறம்'... 'பரிசோதனையில் ஏற்பட்ட திடீர் பின்னடைவுக்குப் பின்'... 'அடுத்தடுத்து வரும் நம்பிக்கை தரும் தகவல்கள்!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஏற்பட்ட திடீர் பின்னடைவை தொடர்ந்து தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்பது குறித்து பல மருந்து நிறுவனங்களும் நம்பிக்கை தரும் தகவல்களை கூறியுள்ளன. 

'அடுத்த மாசமே இத எதிர்பார்க்கலாம், அப்பறம்'... 'பரிசோதனையில் ஏற்பட்ட திடீர் பின்னடைவுக்குப் பின்'... 'அடுத்தடுத்து வரும் நம்பிக்கை தரும் தகவல்கள்!'...

சீன மருந்து நிறுவனமான ஃபோசூன் அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர் மற்றும் ஜெர்மன் தடுப்பூசி தயாரிப்பாளரான பயோஎன்டெக் ஆகியவற்றுடன் கூட்டு சேர்ந்து தற்போது எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசியை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்பது குறித்து பேசியுள்ள ஷாங்காய் ஃபோசுன் மருந்து நிறுவனத்தின் மேம்பாட்டு துணைத் தலைவர் டாக்டர் ஐமின் ஹுய், "இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு கிடைக்கும் என சான்றுகள் தெரிவிக்கின்றன.

எங்கள் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனையில் 25,000 பங்கேற்பாளர்கள் ஏற்கெனவே சேர்ந்துள்ளனர். அக்டோபர் மாத தொடக்கத்தில் அந்த பரிசோதனையின் முடிவுகளைப் பார்க்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆரம்பகால மருத்துவ பரிசோதனைகள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் நம்பிக்கைக்குரியதாக உள்ளது. அடுத்த சில மாதங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தடுப்பூசிகள் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஒப்புதலைப் பெறும் வாய்ப்பு அதிகம்" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் பேசிய சினோபார்மின் தலைமை நிர்வாக அதிகாரி லியு ஜிங்ஜென், மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ள 9 தடுப்பூசிகளில் ஒன்றான தங்களுடைய நிறுவனத்தின் தடுப்பூசி 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் சந்தையை எட்டும் என எதிர்பார்ப்பதாக கூறியிருந்தார். அதேபோல ஆஸ்ட்ராஜெனெகா தலைமை நிர்வாக அதிகாரியும், இந்த ஆண்டு இறுதிக்குள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தங்களுடைய நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசி செயல்திறன் குறித்த முடிவு தெரிந்துவிடும் எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்