அபிநந்தனை இந்தியா கொண்டுவர ஜெனீவா ஒப்பந்தம் உதவுமா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

புல்வாமா தாக்குதலில் ஏறக்குறைய 42 துணை நிலை ராணுவ வீரர்களின் இழப்புக்கு பிறகு இந்தியா பதிலடி தாக்குதல் நிகழ்த்தியது.

அபிநந்தனை இந்தியா கொண்டுவர ஜெனீவா ஒப்பந்தம் உதவுமா?

பின்னர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக இந்திய  ராணுவம் தெரிவித்தது. அதன் பின்னர் இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானங்கள் சுட்டுவீழ்த்தப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சமயத்தில்தான் இந்திய வீரர் ஒருவரை பாகிஸ்தான் பிடித்து வைத்திருப்பதாக ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்டது.

அப்போது இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், நாம் மிக்-21 ரக போர் விமானம் ஒன்றை இழந்ததாகவும், மாயமான வீரர் பாகிஸ்தானில் பிடிபட்டிருப்பது பற்றி ஆய்வு செய்வதாகவும் கூறினார். பின்னர் இந்திய துணை நிலை ராணுவ விமானி அபிநந்தன் பாகிஸ்தானின் கஸ்டடியில் இருப்பதை இந்தியா உறுதி செய்தது.

இந்நிலையில் அபிநந்தன் அடிப்படையில் காஞ்சிவரம் மாவட்டத்தைச் சேர்ந்த, ராணுவ வீரரின் மகன் என்றும் தற்போது குடும்பத்துடன் டெல்லியில் திருமணமாகி குழந்தைகளுடன் வசித்து வந்தவர் என்றும் தகவல்கள் வெளியாகின. அதன் பின்னர் பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடம் டீ குடித்தபடி அபிநந்தன் பேசிய வீடியோ இறுதியாக வெளியாகியது. அதில் அபிநந்தன் தன்னைப் பற்றிய விபரங்களைச் சொல்லிவிட்டு, தான் இயக்கிய விமானம் பற்றி தான் எதுவும் சொல்ல முடியாது என்று கூறினார். மேலும் தன்னை எதுவும் செய்யாத பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கு நன்றியும் கூறினார்.

ஆனால் சர்வதேச மனிதாய சட்டப்படி (International humanitarian law) 196 நாடுகளும் கையெழுத்திட்ட ஜெனீவா ஒப்பந்தம் 1949 அபிநந்தனை மீட்குமா என்கிற கேள்விகள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. அப்படியானால் ஜெனீவா ஒப்பந்தம் சொல்வது என்ன? பிடிபடும் வேறு நாட்டு வீரர்களை சிறையிலிடும்போதோ, அவர்களாகவே சரணடையும்போதோ அவர்களின் மீது உடல்தாக்குதல் நடத்தி அவர்களை காயப்படுத்தவோ கொலை செய்யவோக் கூடாது.  மேலும் காயத்தால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்குவது அவசியம். இதேபோல் விசாரணை இன்றி தண்டனை வழங்குதல் கூடாது, 7 நாட்களுக்குள் அவர்களை தாயகம் அனுப்ப வேண்டும் என்பதெல்லாம்தான் இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம்.

GENEVA CONVENTION, VIOLATION, INTERNATIONAL HUMANITARIAN LAW