'திருமண போட்டோஷூட் நடுவே கேட்ட அதிபயங்கர சத்தம்'... 'உலகையே உலுக்கியுள்ள விபத்தின் பதறவைக்கும் வீடியோ'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பெய்ரூட்டில் இளம்பெண் ஒருவரின் திருமண போட்டோஷூட் இடையே வெடிவிபத்து நடந்தது பதிவாகியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

'திருமண போட்டோஷூட் நடுவே கேட்ட அதிபயங்கர சத்தம்'... 'உலகையே உலுக்கியுள்ள விபத்தின் பதறவைக்கும் வீடியோ'...

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் கடந்த செவ்வாய் அன்று நடந்த அதிபயங்கர வெடி விபத்து மொத்த நாட்டையும் நிலைகுலையச் செய்துள்ளது. பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த 2,750 டன் மதிப்பிலான அம்மோனியம் நைட்ரேட் மருந்து வெடித்ததாலேயே விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து அந்நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

லெபனானில் நடந்த இந்த வெடி விபத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் தங்களுடைய வருத்தங்களைப் பதிவு செய்துவரும் நிலையில், பெய்ரூட்டில் வெடி விபத்து நிகழ்ந்தபோது பதிவான பதறவைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.

அவ்வாறு வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், இளம்பெண் ஒருவரின் திருமண போட்டோஷூட்டின்போது வெடி விபத்து நிகழ அந்தப்பெண் அங்கிருந்து ஓடிச் செல்கிறார். இந்த வீடியோ காட்சியைப் பதிவு செய்த புகைப்படக் கலைஞர் தற்போது அதை வெளியிட்டுள்ளார். இந்த கோர விபத்து சம்பவம் லெபனான் மட்டுமல்லாது உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

 

 

மற்ற செய்திகள்