Elon Musk : "ஒரு வாரம் மூடப்படும் ட்விட்டர் அலுவலகம்?".. எலன் மஸ்க் பகிர்ந்த ‘கல்லறை’ Post.. ட்ரெண்ட் ஆகும் RIP Twitter

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு (ரூ.3.65 லட்சம் கோடி) வாங்கி,  ட்விட்டரின் புதிய உரிமையாளராக பிரபல உலக முன்னணி தொழிலதிபரும் பணக்காரருமான எலான் மஸ்க் பொறுப்பேற்றுள்ளார்.

Elon Musk : "ஒரு வாரம் மூடப்படும் ட்விட்டர் அலுவலகம்?".. எலன் மஸ்க் பகிர்ந்த ‘கல்லறை’ Post.. ட்ரெண்ட் ஆகும் RIP Twitter

Also Read | Wimbledon : 'ஆல் ஒயிட்' உடைக்கு இனி இல்லை தடா..! இனி அடர்நிற அண்டர் ஷார்ட்ஸை வீராங்கனைகள் அணியலாம்.! விம்பிள்டன் அதிரடி.

ட்விட்டரை கையகப்படுத்தியதில் இருந்தே எலன் மஸ்க் பல்வேறு பரபரப்பு நடவடிக்கைகளை செய்து வருகிறார். அந்த வரிசையில் முதற்கட்டமாக சிஇஓ-வாக பொறுப்பு வகித்து வந்த பராக் அகர்வாலை எலன் மஸ்க் பணி நீக்கம் செய்தார். அதன்பின்னர் ட்விட்டர் நிறுவனத்தை லாப பாதைக்கு மீட்டெடுக்கும் வகையில், 50 சதவீதம் சம்பள இழப்பீடு கொடுத்து பலரை வேலையை விட்டு நீக்கியதாக காரணத்துடன் தெரிவித்தவர், வேறு வழியில்லை என்றும் குறிப்பிட்டார். அத்துடன் ஊழியர்கள் அதிக நேரம் பணி செய்தாக வேண்டும் என்று குறிப்பிட்ட எலன் மஸ்க், அதற்கு விருப்பம் இல்லாதவர்களை விலகச் சொல்லி கெடு விதித்திருந்தார்.

இதை பலர் ஏற்கவும் பலர் விருப்பமின்றி விலகவும் செய்தனர்.  தயாரிப்பு மற்றும் பொறியியல் குழுவில் பணிபுரிந்துவந்த சுமார் 70 % ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். முன்னதாக பணம் செலுத்தி ப்ளூ டிக் பெற்று கொள்ளும் ஆப்ஷனை எலன் மஸ்க் அறிமுகப்படுத்தியிருந்தார்.  இதனிடையே ட்விட்டர் நிறுவனத்தின் அலுவலக கட்டிடங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக கூறப்பட்ட விவகாரம் வைரலானது.

ஆம், ட்விட்டர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டு திங்கட்கிழமை திறக்கப்படலாம் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது ட்விட்டரை எலான் மஸ்க் மூட போகிறாரா? என சந்தேகம் எழும் அளவுக்கு அவரே ஒரு ஃபோட்டோவை தமது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ஆம், எலான் மஸ்க்கும் தமது ட்விட்டர் பக்கத்தில் Rip Twitter என்பதை குறிப்பது போல், ட்விட்டருக்கு கல்லறை கட்டி அதன் சமாதியில் பலர் இருப்பதாக ஒரு மீமை பதிவிட்டுள்ளார். இதனால் ட்விட்டர் நிறுவனத்தை மூடுகிறாரா எலான் மஸ்க்? என்று பலரும்  #riptwitter, #GoodByeTwitter ஆகிய ஹேஷ்டேகில் பேசி வருகின்றனர். இதனிடையே ட்விட்டர் தலைமையகம் டெக்ஸாஸ்க்கு மாற்றப்படவிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Also Read | Sivan Kutty : “பாடி ஷேமிங் ஒரு கேவலமான செயல்!..”.. பள்ளி பாடத்தில் விழிப்புணர்வை கொண்டுவரும் கேரள அரசு? கவனம் பெற்ற அமைச்சரின் கருத்து.!

TWITTER, RIP TWITTER, TRENDING, ELON MUSK

மற்ற செய்திகள்