‘மன்னிப்பு.. மன்னிப்பு.. மன்னிப்பு’.. முன்பே எச்சரித்தும் கேட்கவில்லை.. மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியத் துணைக்கண்டத்துக்கு அப்பால் உள்ள தீவுத் தேசமான இலங்கையில் சிங்கள ராணுவமும் ஈழ விடுதலை இயக்கமும் பல ஆண்டுகளாக, ஈழ தேசிய இன நிலங்களுக்கான போரில் ஈடுபட்டு வந்தன.
இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஈழத் தமிழர்களுக்கு மட்டுமே நேர்ந்த சோகம் தற்போது இந்திய மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் இலங்கைக்குச் சென்றவர்கள், சிங்கள குடியுரிமை பெற்ற தமிழவர்கள் என பலருக்கும் நேர்ந்துள்ளது.
கடந்த 21-ஆம் தேதி கொழும்பு தேவாலயங்களில் தொடங்கி அடுத்தடுத்து 9 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் அப்பாவி மக்கள் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை இந்த தற்கொலைப்படைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சுமார் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த மனித வெடுகுண்டுத் தாக்குதலுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பே காரணம் என்று இலங்கை அரசு சந்தேகிப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ரஜிதா செனரத்னே கூறியுள்ளார்.
முன்னதாக இந்த தகவலைச் சொல்லி உளவுத்துறை எச்சரித்ததாகவும், ஆனால் அதைப் பொருட்படுத்தாத இலங்கை அரசு பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும், விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் வழங்கப்படவுள்ளதாகவும், சிதையுண்ட தேவாலயங்கள் சீரமைக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை இதுவரை எவ்வித அமைப்பும் ஏற்கவோ, இந்த தாக்குதலுக்கான பொறுப்பேற்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.