'ஒருபுறம் எகிறிய கொரோனா பாதிப்பு'... 'வீட்டை விட்டு வெளியேறாத மக்களால்'... 'மறுபுறம் நிகழ்ந்துள்ள பெரும் நன்மை!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தென்னாப்பிரிக்காவில் கொரோனா ஊரடங்கால் பாதி குற்றங்கள் குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஒருபுறம் எகிறிய கொரோனா பாதிப்பு'... 'வீட்டை விட்டு வெளியேறாத மக்களால்'... 'மறுபுறம் நிகழ்ந்துள்ள பெரும் நன்மை!'...

தென்னாப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் அங்கு நடைபெறும் குற்றச்சம்பவங்கள் பாதியளவு குறைந்துவிட்டதாக அந்நாட்டின் காவல்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த நாட்களை அவர் கிரைம் ஹாலிடே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்ததால் கொரோனா பாதிப்பு குறைக்கப்பட்டதுடன், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பாலியல் வன்முறை, கொலை போன்ற குற்றச்சம்பவங்களும் 40 சதவீதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. உலகிலேயே அதிக குற்றங்கள் நடக்கும் நாடுகளில் ஒன்றான தென்னாப்பிரிக்காவில்தான் அந்த கண்டத்திலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாதி பேர் உள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்