'கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும்'... 'ஒரு புது சிக்கல் இருக்கு'... 'நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பின்னரும் அதில் ஏற்பட வாய்ப்புள்ள ஒரு சிக்கல் குறித்து அமெரிக்க நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உலகமே கொரோனா பாதிப்பால் ஸ்தம்பித்துள்ள நிலையில் இந்தாண்டு முடிவதற்குள் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையிலேயே உலக நாடுகள் உள்ளன. இந்நிலையில் தற்போது கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டால் ஒரு டோஸ் மட்டுமே போதுமானதாக இருக்காது எனவும், மக்களுக்கு 2 டோஸ் அளவு மருந்து தேவைப்படும் என்பதால் இது மிகப் பெரிய சவாலாக இருக்கும் எனவும் அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்துப் பேசியுள்ள அமெரிக்க நிபுணர்கள், "கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தாலும், கொரோனா பாதித்தவர்களுக்கு ஒரு டோஸ் மட்டுமே போதாது. ஒவ்வொருவருக்கும் 2 டோஸ் மருந்து தேவைப்படும். இது மிகப்பெரிய சவால். வைரஸ் பாதிப்புக்கு பின் முழு கவச உடைகள், கையுறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், தடுப்பூசியை இரட்டிப்பாக உற்பத்தி செய்ய வேண்டும் என்பது சவாலான பணியாகும்" எனத் தெரிவித்துள்ளனர். இதுபற்றி பேசியுள்ள டென்னசியில் உள்ள வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் சுகாதார கொள்கை பேராசிரியர் டாக்டர் கெல்லி மூர், இது மனித வரலாற்றில் மிகவும் கடினமான தடுப்பூசி திட்டமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்