'கொரோனாவுக்கு நடுவிலும் ஆபீஸ் செல்பவர்கள் கவனத்திற்கு'... 'இந்த வசதி மட்டும் இல்லன்னா'... 'முக்கிய தகவலுடன் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!!'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பாதிப்பு வேகமாகப் பரவி வரும் நிலையில் அலுவலக சூழலில் கொரோனா பரவுவது குறித்த முக்கிய ஆய்வு முடிவு ஒன்றை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
பெரும்பாலான அலுவலங்களில் ஏசி அறைகளே உள்ள நிலையில், வெளிப்புற காற்று உள்ளே வந்து செல்ல ஏதுவான வழி இருப்பதில்லை. அலுவலக அறைகளின் அனைத்து பகுதிகளிலும் சமமான வெப்பநிலை நிலவ வேண்டும் என்பதற்காக இந்த அமைப்பு அமைக்கப்படுகிறது. ஆனால் தற்போதுள்ள சூழலில் இந்த அமைப்பு கொரோனா பாதிப்பை எளிதாக பரவச் செய்யும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்த அறை அமைப்பில் வெளிப்புறக் காற்று எளிதாக வந்து செல்ல முடியாத நிலை இருப்பதால் அறைக்குள்ளேயே தொற்றுள்ள திரவத்துளிகள் சுற்றிக்கொண்டிருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் முக கவசமின்றி இருமல், தும்முதல் போன்ற செயல்களை செய்யும்போது, தொற்றுள்ள திரவத்துளிகள் காற்றில் கலந்து அறைக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்கும் எனவும், அது முக கவசம் அணியாதவர்களை எளிதில் தொற்றிவிடும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக பாதிப்புள்ள நபர் முக கவசம் இன்றி பேசுதல், சிரித்தல் மூலம் கூட மற்றவர்களுக்கு எளிதில் பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடும் எனவும், அதனால் காற்றோட்ட வசதி சரியாக இல்லாத அலுவலகம் என்றால் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதே நல்லது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்