My India Party

'தடுப்பூசி போட்டு 2 மாசத்துக்கு'... 'இந்த பழக்கம் மட்டும் கூடவே கூடாது?!!'... 'தடுப்புமருந்து போடத் தயாரான கையோடு'... 'முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ள நாடு!!!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா தடுப்பூசி பெறுபவர்கள் இரண்டு மாதங்களுக்கு தவிர்க்க வேண்டிய முக்கியமான பழக்கம் குறித்து ரஷ்ய நிபுணர் அறிவுறுத்தியுள்ளார்.

'தடுப்பூசி போட்டு 2 மாசத்துக்கு'... 'இந்த பழக்கம் மட்டும் கூடவே கூடாது?!!'... 'தடுப்புமருந்து போடத் தயாரான கையோடு'... 'முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ள நாடு!!!'...

ரஷ்யா தயாரித்துள்ள முதல் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்கை நாட்டு மக்களுக்கு இந்த வாரம் போடத் தயாராகியுள்ளது. முதல்கட்டமாக மருத்துவ ஊழியர்கள், சமூக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்தத் தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெறுபவர்கள் அதற்கு முன்னும் பின்னும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மதுவைத் தவிர்க்க வேண்டுமென ரஷ்யாவின் நுகர்வோர் பாதுகாப்பு கண்காணிப்புக் குழுவின் தலைவர் அன்னா போபோவா தெரிவித்துள்ளார்.

No Drinking For 2 Months After COVID-19 Vaccine Russia Tells Citizens

அதாவது மதுபானம் அருந்துவது கொரோனா தடுப்பூசியின் செயல்பாட்டை பாதிக்கும் என்பதால், தடுப்பூசி போடுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பும், தடுப்பூசி போட்ட 42 நாட்கள் வரையிலும் மதுபானம் அருந்தக்கூடாது எனவும், தடுப்பூசி போட்டபிறகு உடம்பில் எதிர்ப்புசக்தி உருவாவதை மதுபானம் பாதிக்கும் என்பதால், குறிப்பிட்ட காலம் வரையிலுமே மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். உலகில் அதிகமாக மது அருந்தும் மக்கள் உள்ள நாடுகளில் ஒன்றான அங்கு இந்த எச்சரிக்கையை உள்வாங்கிக்கொள்வது மக்களுக்கு சற்று கடினமான ஒன்றாகவே இருக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்