‘பாராஷூட்டாக மாறிய நிழற்குடை’.. 3-4 மீட்டர் அந்தரத்தில் பறக்கவிட்ட சூறாவளி.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்அதிரடியாக வீசிய சூறைக்காற்றில் மாட்டிய நபர் ஒருவர் குடையுடன் தூக்கிச் செல்லப்படும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாகவே பேரிடர்களில் திடீரென தனி மனிதர்கள் சிக்கிக் கொள்ளும் வீடியோக்கள் மற்றவர்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். ஒருவருக்கு நிகழும் அசம்பாவிதத்தைப் பார்த்து மற்றவர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருப்பதுண்டு. முறையான முன்னறிவிப்புகளும் முன்னெச்சரிக்கையும் இருந்தால் பேரிடர்களில் இருந்து தப்பித்துக்கொள்ள உதவும் என்றாலும், அப்பொழுதும் திடீரென இம்மாதிரியான இடர்பாடுகளில் சிக்கிக்கொள்பவர்கள் உண்டு.
அப்படித்தான் துருக்கியில் மிக அண்மையில் வீசிய சூறாவளிக் காற்றில், ரோட்டோரத்தில் இருந்த எல்லா பொருட்களும் பறந்தன. இவற்றுள் சாலை ஓரமாக கடை வைத்திருப்பவர்களுக்காக வைக்கப்பட்டிருந்த பெரிய நிழற்குடைகள் இந்த புயல் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ள சம்பவம் பலரையும் அச்சுறுத்தியுள்ளது. அந்த சமயம் குடையினை தாங்கிப் பிடிக்க வைக்கப்பட்டிருந்த இரும்பு ஸ்டாண்டின் மீது ஏற, பலமான சூறாவளி காற்று அந்த குடையோடு சேர்த்து அந்த நபரையும் தூக்கி வீச, அவர் வெகு தூரம் போய் விழுகிறார். ஆனாலும் அவருக்கு காயம் உண்டாகவில்லை.
அவருடன் சேர்ந்து, அந்த நிழற்குடை பறக்காமல் இருப்பதற்காக அந்த இரும்புத் தாங்கியில் கால் வைத்து அழுத்தம் கொடுப்பதற்காக ஏறிய இருவரும், அந்த நிழற்குடை பறக்கத் தொடங்கியவுடனே இறங்கிக் கொண்டதால் அவர்கள் இருவரும் தப்பித்துக்கொண்டனர்.
இதுபற்றி பேசிய அந்த நபர் கொக்கடாலி, தான் எதிர்பாராத போது, அந்த குடையுடன் சேர்த்து சூறைக் காற்று தன்னை தூக்கி அடித்துவிட்டதாகவும், அதனால் கிட்டத்தட்ட ஒரு 3-4 மீட்டர் அந்தரத்தில் பறந்ததாகவும், ஆனால் மேலும் உயரே செல்லும்போது அதில் இருந்து குதித்துவிட்டதாகவும் இதனால் தனக்கு ஒன்றும் ஆகவில்லை, தான் பலத்தொடுதான் இருப்பதாகவும் கூறியுள்ளார். நிழற்குடையுடன் கொக்கடாலி பறந்து போகும்போது ஒரு நொடி பாராஷூட்டில் செல்வது போல் உணர்ந்ததாகவும் பேசியுள்ளார்.